திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடியை அடுத்த திம்மாம்பேட்டை நெடுஞ்சாலையில் காவல் துறையினர் வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தபோது, அவ்வழியாக வந்த மினி லாரி ஓட்டுனர் காவலர்களை கண்டவுடன் லாரியை நிறுத்திவிட்டு ஓட்டம் பிடித்தார்.
ஆந்திராவுக்கு கடத்த முயன்ற 2.5 டன் ரேஷன் அரிசி பறிமுதல் - 2.5 tonnes of rice seized
திருப்பத்தூர்: வாணியம்பாடி அருகே ஆந்திராவுக்கு கடந்த முயன்ற 2.5 டன் ரேஷன் அரிசி மூட்டைகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
vaniyampaadi
இதில் சந்தேகமடைந்த காவலர்கள் லாரியை சோதனையிட்டதில் 2.5 டன் கடத்தல் ரேஷன் அரிசி மூட்டைகள் சிக்கியுள்ளது. இதையடுத்து காவலர்கள், லாரியுடன் அரிசி மூட்டைகளை திம்மாம்பேட்டை காவல் நிலையத்துக்கு எடுத்துச் சென்றனர். மேலும், தப்பியோடிய லாரி டிரைவரை தீவிரமாக தேடிவருகின்றனர்.
இதையும் படிங்க: கேரளத்துக்கு கடத்த முயன்ற 8 டன் ரேஷன் அரிசி பறிமுதல்