வேலூர் மாவட்டம் இராணிப்பேட்டை அருகே உள்ள வசூர் கிராமத்தைச் சேர்ந்தவர் அசோகன். இவரது மகள் நிஷா(பெயர் மாற்றப்பட்டுள்ளது) (17) எட்டாம் வகுப்பு வரை படித்த இவர் தனியார் ஷு தயாரிக்கும் தொழிற்சாலையில் வேலை செய்து வருகிறார். கடந்த மாதம் செப். 28ஆம் தேதி இவர் சென்னையில் உள்ள தனது தோழி தீபிகாவின் பிறந்த நாளை கொண்டாடிவிட்டு, சென்னையிலிருந்து ஆற்காடு பேருந்து நிலையம் வந்திறங்கினார்.
அப்போது இரவு நேரம் என்பதால் ஊருக்குச் செல்ல பேருந்து இல்லாத நிலையில், தனது பெரியப்பா மகன் குபேந்திரன்(21) என்பவருக்கு ஃபோன் செய்து ஆற்காடு பேருந்து நிலையத்திற்கு வரச்சொல்லி அழைத்துள்ளார். இவரது அழைப்பை ஏற்று ஆற்காடு பஸ் நிலையத்திற்கு வந்த குபேந்திரன், இருசக்கர வாகனத்தில் உஷாவை வீட்டிற்கு அழைத்துச் சென்றார்.
இந்நிலையில், பள்ளேரி வழியாக யாரும் இல்லாத அந்த இரவு நேரத்தில், குபேந்திரனின் சகோதர உறவுமுறையான அம்மையார்குப்பம் பகுதியைச் சேர்ந்த அப்பு (எ) அரியை(18) குபேந்திரன் ஃபோன் செய்து அழைத்துள்ளார். அந்த இளைஞர் வருவதைக் கண்டதும் நிஷா மூன்றாவது நபர் ஒருவர் வந்திருப்பது தொடர்பாக குபேந்திரனிடம் கேட்டுள்ளார்.
அப்போது குபேந்திரன் நிஷாவின் கன்னத்தில் அறைந்து,’ அப்பு என்ன சொல்கிறானோ, அதை செய்’ எனக் கூறியுள்ளார். இதற்கு நிஷா மறுப்புத் தெரிவிக்கவே, நிஷாவின் கைகளை பின்புறமாக குபேந்திரன் கட்டியுள்ளார். இதனைத்தொடர்ந்து அப்பு, குபேந்திரன் ஆகிய இருவரும் நிஷாவை பாலியல் வல்லுறவு செய்து, இந்த சம்பவத்தை வெளியில் யாரிடமும் சொல்லக்கூடாது என மிரட்டியதாகக் கூறப்படுகிறது.