வேலூர் மாவட்டம் தமிழ்நாடு-ஆந்திர எல்லையில் அமைந்துள்ள குடியாத்தம் பகுதியை அடுத்த சைனகுண்டா, தணகொண்பல்லி, மோடிகுப்பம், வலசை உள்ளிட்டப் பகுதிகள் வனப்பகுதியை ஒட்டியுள்ளப் பகுதிகளாகும். அதனால் அப்பகுதிகளுக்கு காட்டு யானைகள் அடிக்கடி உணவு தேடிவந்து விவசாய நிலப் பயிர்களை நாசம் செய்துவருகின்றன.
அதைத்தொடர்ந்து கடந்த சில நாள்களாக 16 காட்டு யானைகள் அப்பகுதிகளில் உள்ள விவாசாய நிலங்களில் புகுந்து பயிர்களை நாசம் செய்துவந்தன. அதனால் அப்பகுதி மக்கள் வனத் துறையினருக்குத் தகவல் தெரிவித்தனர். அதையடுத்து வனத் துறையினர் யானைகளை வனப்பகுதிக்குள் விரட்டியடித்தனர்.