கரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக இந்தியாவில் ஏப்ரல் 14ஆம் தேதி வரை ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ளது. ஆனால் அத்தியாவசியப் பொருட்களை வாங்க பலரும் தெருக்களில் அங்குமிங்கும் சுற்றி வருகின்றனர். அவ்வாறு வெளியே வரும் பொதுமக்கள் சமூக இடைவெளியை கடைபிடித்து 3 அடி முதல் 6 அடி இடைவெளி விட்டு கடைகளில் தங்களுக்கு தேவையானவற்றை வாங்க வேண்டும் என்று மத்திய, மாநில அரசுகள் அறிவுறுத்தி வருகின்றன.
இந்நிலையில் வேலூரில் பாகாயம், கணியம்பாடி, சேன்பாக்கம், சத்துவாச்சாரி ஆகிய பகுதிகளில் சமூக இடைவெளியை கடைபிடிக்காமல் செயல்பட்ட மீன், கோழி, ஆடு உள்ளிட்ட 11 இறைச்சி கடைகளுக்கு வேலூர் வட்டாட்சியர் சரவணமுத்து சீல் வைத்து நடவடிக்கை மேற்கொண்டார்.