தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

வேலூரில் ஒரே நாளில் 10 போலி மருத்துவர்கள் கைது! - போலி அலோபதி மருத்துவர்

வேலூர்: மாவட்டத்தில் அலோபதி மருத்துவம் பார்த்துவந்த பத்து போலி மருத்துவர்கள் கைதுசெய்யப்பட்டிருப்பது மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஒரே நாளில் கைது செய்யப்பட்ட 10 போலி அலோபதி மருத்துவர்கள் !
ஒரே நாளில் கைது செய்யப்பட்ட 10 போலி அலோபதி மருத்துவர்கள் !

By

Published : Jul 28, 2020, 1:16 AM IST

உலகளாவிய பெருந்தொற்றான கரோனா பாதிப்பு தமிழ்நாட்டில் தீவிரமடைந்துவருகிறது. இந்தியளவில் கரோனா பாதிப்பில் இரண்டாம் இடத்தில் இருக்கின்ற தமிழ்நாட்டின் பல்வேறு மாவட்டங்களில் அதன் பாதிப்பு அதிகரித்துக் கொண்டேவருகிறது.

அதன் ஒரு பகுதியாக, வேலூர் மாவட்டத்தில் கரோனா தொற்று நாளுக்கு நாள் தீவிரமடைந்துவருகிறது. வேலூர் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் கரோனா பரவலைக் கட்டுப்படுத்த மாவட்ட நிர்வாகம் தீவிரமாகப் பணியாற்றிவருகிறது.

இந்நிலையில், கரோனா பரவலைத் தடுக்க தாங்கள் எடுத்துவரும் நடவடிக்கைகளுக்கு தொடர்ச்சியாக இடையூறு ஏற்பட்டுவருவதாக மாவட்ட நிர்வாகம் சந்தேகமடைந்தது. குறிப்பாக, போலி மருத்துவர்கள் இந்த நேரத்தில் அதிகளவில் இத்தகைய செயல்களில் ஈடுபட்டுவருவதாகவும் தகவல்கள் கிடைந்தன.

இதனடிப்படையில், பொதுமக்கள் ஏமாறாத வண்ணம் தடுக்கவும், போலி மருத்துவர்களைக் கைது செய்யவும் சிறப்புக் குழுக்களை அமைத்து அதிரடி ஆய்வுகளை நடத்த வேலூர் மாவட்ட நிர்வாகம் முடிவெடுத்தது.

மாவட்ட மருத்துவப் பணியக இணை இயக்குநர் தலைமையில் வருவாய்த் துறை, காவல் துறை, மருந்தாளுநர்கள், மருத்துவர்கள், சுகாதாரத் துறை அலுவலர்கள் ஆகிய 50 பேர் அடங்கிய பத்து சிறப்புக் குழுக்கள் உருவாக்கப்பட்டு, மாவட்டம் முழுவதும் அதிரடி ரெய்டுகள் நடத்தப்பட்டன.

வேலூர், குடியாத்தம், அணைகட்டு, காட்பாடி, திமிரி, கொணவட்டம், அரியூர், சைதாப்பேட்டை ஆகிய பகுதிகளில் நடத்தப்பட்ட சோதனைகளில் பத்து போலி மருத்துவர்கள் கண்டறியப்பட்டு, கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

இவர்களில் பலர் 10, 12ஆம் வகுப்புகள் மட்டுமே படித்துவிட்டு அலோபதி மருத்துவர்கள் போல கிளினிக் நடத்திவந்துள்ளனர். கைதுசெய்யப்பட்ட போலி மருத்துவர்களின் கிளினிக்குகளுக்கு சீல் வைக்கப்பட்டு, பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

இது தொடர்பாக வேலூர் மாவட்ட ஆட்சியர் சண்முகசுந்தரம் கூறுகையில், "இந்தச் சோதனைகள் தொடர்ந்து நடைபெறும். பொதுமக்கள் தங்கள் பகுதியில் உள்ள போலி மருத்துவர்கள் பற்றிய தகவல் அறிந்தால், மாவட்ட ஆட்சியரின் குறைதீர்வு வாட்ஸ்ஆப் எண்ணுக்கு (94980 35000) தகவல் அனுப்பலாம்" என தெரிவித்தார்.

ABOUT THE AUTHOR

...view details