கல்குவாரியில் குதித்து இளம்பெண் தற்கொலை - இளம்பெண் தற்கொலை
திருச்சி: கல்குவாரி குட்டை நீரில் குதித்து இளம்பெண் தற்கொலை செய்து கொண்டார்.
திருச்சி எடமலைப்பட்டி புதுார் செட்டியப்பட்டி சாலையை சோ்ந்தவா் அமலா(27). இவருக்கும் இப்பகுதியை சோ்ந்த ஆட்டோ ஓட்டுநர் மணிகண்டனுக்கும் கடந்த ஒரு வருடத்திற்கு முன்பாக திருமணம் நடைபெற்றது. இவர்களுக்கு குழந்தை இல்லை.
இதனால் அமலா மிகவும் மன உளைச்சலில் இருந்துள்ளாா். இந்நிலையில் இரு தினங்களுக்கு முன்பு கணவரிடம், தாய் வீட்டிற்கு சென்று வருகிறேன் என்று கூறிவிட்டு அமலா வீட்டிலிருந்து வெளியே சென்றுள்ளார். ஆனால் அமலா தாய் வீட்டிற்கும் செல்லவில்லை கணவர் வீட்டுக்கும் திரும்பி வரவில்லை. பல இடங்களில் தேடியும் அவர் கிடைக்கவில்லை.
இந்நிலையில் எடமலைப்பட்டிபுதுாா் ராமச்சந்திரா நகா் பகுதியில் உள்ள ஒரு கல் குவாாி குட்டை நீரில் பெண் பிணம் மிதப்பதாக எடமலைப்பட்டி புதுாா் காவல் நிலையத்திற்கு தகவல் கிடைத்துள்ளது. தகவலறிந்த திருச்சி தீயணைப்பு வீரா்கள் விரைந்து சென்று உடலை மீட்டனர்.
அதில் தற்கொலை செய்து கொண்டவர் வீட்டை விட்டு வெளியேறிய அமலா என்பது தெரியவந்தது.இதையடுத்து காவல்துறையினர் உடலை மீட்டு உடற்கூறு ஆய்வுக்காக திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இது குறித்து வழக்கு பதிவு செய்து காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனா். திருமண நடந்து ஒரு வருடத்திற்குள் இளம்பெண் தற்கொலை செய்து கொண்டதால் திருச்சி ஆா்டிஓ தலைமையில் விசாரணை நடைபெறுகிறது.