தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

தூய்மைப் பணியாளர்களுக்கு யோகா பயிற்சி - தூய்மை பணியாளர்களுக்கு யோகா பயிற்சி

திருச்சி: மணப்பாறையில் தூய்மைப் பணியாளர்களுக்கு நுரையீரலை வலுப்படுத்தும் யோகாசனப் பயிற்சி அளிக்கப்பட்டது.

தூய்மை பணியாளர்களுக்கு யோகா பயிற்சி
தூய்மை பணியாளர்களுக்கு யோகா பயிற்சி

By

Published : May 5, 2020, 1:50 PM IST

உலகையே அச்சுறுத்தி வரும் கரோனா நோய் தொற்று நாளுக்குநாள் அதிகரித்து வருகிறது. இந்நிலையில் அதன் தாக்கத்திலிருந்து மக்களை பாதுகாக்கும் பணியில் தூய்மைப் பணியாளர்கள் முக்கிய பங்கு வகித்து வருகின்றனர்.

இந்நிலையில் சுமார் 200க்கும் மேற்பட்ட தூய்மைப் பணியாளர்கள் மணப்பாறை பகுதியில் தூய்மைப் பணியில் ஈடுபட்டுள்ளனர். அவர்களுக்கு இன்று யோகா பயிற்சி அளிக்கப்பட்டது.

இதில் ஆண்கள், பெண்கள் என சுமார் 50க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டு நுரையீரல், இதயத்திற்கு வலு சேர்க்கும் வகையிலான மூச்சுப் பயிற்சி உள்ளிட்ட ஏழு விதமான யோகா பயிற்சி மேற்கொண்டனர். இதில் நகராட்சி ஆணையர் மற்றும் உதவிப் பொறியாளர் நெடுமாறன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

தூய்மை பணியாளர்களுக்கு யோகா பயிற்சி

மேலும் நோய் எதிர்ப்பு சக்தியை உருவாக்க சித்தா, ஆங்கில மருந்துகள் போன்றவைகளை மக்கள் எடுத்துக் கொள்வது போல் யோகாசனம் செய்வதன் மூலமும் தங்களது உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை உருவாக்க முடியும் என்பதால் அவர்களுக்கு மூச்சு பயிற்சியான யோகாசனம் செய்வது எப்படி என்ற பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது.

இதையும் படிங்க: ட்ரோன் கேமரா கண்காணிப்பு – வேடிக்கை பார்க்கும் இளைஞர்கள்

ABOUT THE AUTHOR

...view details