புதுக்கோட்டை மாவட்டத்தில் ஐந்தாவது சர்வதேச யோகா தினத்தை கொண்டாடும் விதமாக நேரு யுவகேந்திரா, விளையாட்டு மேம்பாட்டு ஆணையம், மாவட்ட யோகா சங்கம், ஆத்மா யோகா மையம் ஆகியோர் இணைந்து யோகா தின நிகழ்வை நடத்தினர்.
சர்வதேச யோகா தினத்தில் யோகாசனத்தின் நன்மை குறித்து பொதுமக்களுக்கு விளக்கம்! - Yoga awarness programme
திருச்சி: சர்வதேச யோகா தினத்தை முன்னிட்டு யோகாசனத்தின் நன்மைகள் குறித்து மாவட்ட நிர்வாகம் சார்பில் பொதுமக்களுக்கு விளக்கம் கொடுக்கப்பட்டது.
சர்வதேச யோகா தினத்தில் யோகாசனத்தின் நன்மை குறித்து பொதுமக்களுக்கு விளக்கம்!
இதில் யோகா செய்வதால் ஏற்படும் நன்மைகள் குறித்து விளக்கப்பட்டது. அதைத்தொடர்ந்து, பொதுமக்களுக்கு யோகாசன பயிற்சிகள் அளிக்கப்பட்டது. இதில் 50க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டு யோகாசன பயிற்சிகளை செய்தனர்.
திருவாரூரில் ஆயுதப்படை மைதானத்தில் யோகா நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் காவல் கண்காணிப்பாளர் துரை, பெண் காவலர்கள் உள்ளிட்ட 500க்கும் மேற்பட்ட காவலர்கள் பங்கேற்றனர்.
Last Updated : Jun 22, 2019, 8:28 AM IST