தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

இரண்டாவது கணவரை வெட்டி கொன்ற மனைவி - அதிர்ச்சி வாக்குமூலம் - திருச்சி முசிறி கொலை வழக்கு

திருச்சி முசிறி அருகே தனது பிள்ளைகளிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்ட இரண்டாவது கணவரைக் கொலை செய்த பெண்ணின் அதிர்ச்சி வாக்குமூலம் வெளியாகியுள்ளது.

இரண்டாவது கணவரை வெட்டி கொன்ற மனைவி
இரண்டாவது கணவரை வெட்டி கொன்ற மனைவி

By

Published : Jan 8, 2023, 10:45 PM IST

இரண்டாவது கணவரை வெட்டி கொன்ற மனைவி

திருச்சி:விழுப்புரத்தைச் சேர்ந்தவர் ஆறுமுகம், இவரது மகன் பிரபு (30). பன்ருட்டி அருகே உள்ள வேலங்காடு பகுதியைச் சேர்ந்தவர் பொன்னன் மனைவி ரேகா (30) செங்கல் சூளையில் கூலி தொழிலாளர்களாக வேலை செய்து வந்துள்ளனர். தற்போது ரேகாவிற்கு 16, 14, 10 ஆகிய வயதுகளில் மூன்று பெண் குழந்தைகள் உள்ளனர். கடந்த பத்து வருடங்களுக்கு முன்பு பொன்னன் இறந்துவிட்ட நிலையில் ரேகா மூன்று குழந்தைகளுடன் தொடர்ந்து முசிறி பகுதியில் உள்ள பல்வேறு செங்கல் சூளைகளில் வேலை செய்து வந்துள்ளார்.

இந்நிலையில் அய்யம்பாளையம் அருகே சண்முகம் என்பவர் செங்கல் சூளையில் வேலை செய்த போது ரேகாவிற்கு பிரபுவுடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இருவரும் கணவன் மனைவியாகக் கடந்த எட்டு வருடங்களாக செங்கல் சூளையில் வேலை செய்து கொண்டு ஒரே குடும்பமாக, குழந்தைகளுடன் வசித்து வந்துள்ளனர். இந்நிலையில் கடந்த 2022 செப்.3ஆம் தேதியன்று முசிறி அருகே உள்ள அய்யம்பாளையம் காவிரி ஆற்றில் உடல் முழுவதும் அழுகிய நிலையில் அடையாளம் தெரியாத ஆண் பிணம் ஒன்று கரை ஒதுங்கியது.

இது குறித்துத் தகவலறிந்த முசிறி காவல் துறையினர், தீயணைப்புத் துறையினர் உதவியுடன் சடலத்தை மீட்டு திருச்சி அரசு மருத்துவமனைக்கு உடற்கூராய்வுக்காக அனுப்பி வைத்தனர். தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வந்த நிலையில் அவர் யார் என்ற விபரம் அறியப்படாததால் சடலம் அடக்கம் செய்யப்பட்டது. இந்நிலையில் பிரபுவின் தந்தை ஆறுமுகம் கடந்த நான்கு மாதங்களாக மகன் பிரபு குறித்து எவ்வித தகவலும் தெரியவில்லை கண்டுபிடித்துத் தர வேண்டும், மகன் பிரபுவுடன் தொடர்பிலிருந்த ரேகா மற்றும் அவரது குழந்தைகளை விசாரிக்க வேண்டும் என முசிறி காவல் நிலையத்தில் நேற்று புகார் செய்தார்.

புகாரின் பேரில் காவல் துறையினர் ரேகாவை காவல் நிலையம் அழைத்து வந்து விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில் தனது இரண்டாவது கணவர் பிரபு தனது இரண்டு பெண் பிள்ளைகளிடம் பாலியல் ரீதியாக அத்துமீறி நடந்து கொண்டதாகவும், அதனை நேரில் பார்த்துக் கண்டித்தும் கேட்காததால் தலையில் அரிவாளால் வெட்டி அடித்துக் கொன்று காவேரி ஆற்றில் தள்ளிவிட்டதாக அதிர்ச்சி வாக்குமூலம் அளித்தார்.

இதையடுத்து பெண் காவலர்கள் மூலம் குழந்தைகள் தனியாக விசாரிக்கப்பட்டனர். விசாரணையில் ரேகாவின் பெண் குழந்தைகள் கூறிய தகவலைக் கேட்டு பெண் காவல் துறையினர் கண் கலங்கினர். பிரபு மிகவும் மூர்க்கத்தனமாகவும், தகாதமுறையில் குழந்தைகளை பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாக்கி இருப்பதாகத் தெரியவந்தது. இதையடுத்து ரேகாவை சம்பவம் நடைபெற்ற அய்யம்பாளையம் அருகே உள்ள செங்கல் சூளைக்கு காவல்துறையினர் அழைத்துச் சென்றனர். அங்கு ரேகா நடந்த விபரங்களை நடித்துக் காட்டினார்.

காவிரி ஆற்றின் முட்புதரில் சிக்கியிருந்த பிரபுவின் கைலி காவல் துறையினரால் கைப்பற்றப்பட்டது. இதையடுத்து ரேகாவை கைது செய்த காவல் துறையினர், கொலைக்குப் பயன்படுத்தப்பட்ட அரிவாள், உருட்டுக்கட்டை ஆகியவற்றைப் பறிமுதல் செய்தனர். கணவன் இறந்த நிலையில் இரண்டாவதாக வந்த கணவர் பிள்ளைகளிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்ட நிலையில் அவரை மனைவி வெட்டி கொன்ற சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதையும் படிங்க:Crime: வாக்குவாதத்தில் மனைவியின் மூக்கை கடித்து துப்பிய கணவர்!

ABOUT THE AUTHOR

...view details