தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

மதுவால் நேர்ந்த விபரீதம் - தற்கொலை செய்துகொண்ட மனைவி - wife commits suicide in Trichy

மணப்பாறை அருகே கணவனுடன் ஏற்பட்ட தகராறு காரணமாக மனைவி தற்கொலை செய்துகொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

மதுவால் நேர்ந்த விபரீதம்
மதுவால் நேர்ந்த விபரீதம்

By

Published : Dec 28, 2021, 8:15 AM IST

திருச்சி: மணப்பாறை பகுதியில் வாடகை வீட்டில் குடியிருந்து வருபவர் பழனிச்சாமி. இவர் தொடர்ந்து மது அருந்துவதால் அவரது மனைவி வளர்மதி கடந்த சில நாள்களாக கண்டித்து வந்துள்ளார்.

இதன் காரணமாக அடிக்கடி இருவருக்கும் இடையே பிரச்சனை ஏற்பட்டு வந்துள்ளது. கணவன், மனைவிக்கு இடையே வழக்கம்போல் நேற்று முன்தினம் (டிசம்பர் 26) மாலை தகராறு ஏற்பட்டுள்ளது.

அப்போது இருவருக்கும் வாக்குவாதம் முற்றியதில் வளர்மதி தனது உடலில் மண்ணெண்ணெய் ஊற்றி தற்கொலைக்கு முயன்றுள்ளார். இதை சற்றும் எதிர்பார்த்திராத அவரது கணவர் பழனிச்சாமி மனைவியை காப்பாற்ற முயற்சி செய்துள்ளார்.

சத்தம் கேட்டு ஓடி வந்த அக்கம்பக்கத்தினர் இருவரையும் மீட்டு சிகிச்சைக்காக மணப்பாறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதில் சிகிச்சை பலனின்றி வளர்மதி நேற்று (டிசம்பர் 27) காலை உயிரிழந்தார். சம்பவம் குறித்து மணப்பாறை காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இதையும் படிங்க:கோவையில் விடியவிடிய மது அருந்தி மூவர் உயிரிழந்த விவகாரத்தில் திடீர் திருப்பம் - ஒருவர் மீது கொலை வழக்குப்பதிவு!

ABOUT THE AUTHOR

...view details