தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

வந்தது வஸ்திரம்... திருவரங்கம் விழாக்கோலம்..

ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் திருக்கோயிலிருந்து திருவரங்கம் ரெங்கநாதர் மற்றும் தாயாருக்கு வஸ்திர மரியாதை இன்று வழங்கப்பட்டது. நாளை நடைபெறும் திருத்தேரோட்டத்தின் போது நம்பெருமாள் இந்த வஸ்திரங்களை அணிந்து காட்சியளிப்பார்.

வந்தது வஸ்திரம்... ஶ்ரீரங்கம் விழாக்கோலம்
வந்தது வஸ்திரம்... ஶ்ரீரங்கம் விழாக்கோலம்

By

Published : Apr 28, 2022, 2:16 PM IST

Updated : Apr 28, 2022, 3:16 PM IST

திருச்சி: திருவரங்கம் ரெங்கநாதர் ஆலயத்திற்கு ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் திருக்கோவிலிருந்து ஆண்டுதோறும் சித்திரை திருவிழாவின்போது ஸ்ரீரங்கம் நம்பெருமாளுக்கு வஸ்திர மரியாதை செய்யும் வைபவம் நடத்தப்பட்டு வருவது வழக்கம். அதன்படி இன்று (ஏப்ரல்.28) ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் திருக்கோவிலிருந்து திருவரங்கம் அரங்கநாத சுவாமிக்கும், உற்சவர் நம்பெருமாளுக்கும் பட்டு வஸ்திரங்கள் மற்றும் அரங்கநாயகி தாயாருக்கும், நாச்சியார்களுக்கு பட்டு புடவைகள் மாலை மற்றும் மங்களப் பொருட்கள் கொண்டு வந்திருந்தனர்.

இதனை ஸ்ரீவில்லிபுத்தூர் கோயில் நிர்வாகிகள் எடுத்து வந்து, திருவரங்கம் இணை ஆணையர் மாரிமுத்து முன்னிலையில் கோயில் பட்டாச்சாரியார்களிடம் ஒப்படைத்தனர். முன்னதாக நம்பெருமாளுக்கான வஸ்திரங்கள், பழங்கள் மற்றும் பூக்கள் யாவும் கருட மண்டபத்தில் இருந்து திருக்கோயில் பிரகாரங்களில் வலம்வந்து பின்னர் மூலஸ்தானம் கொண்டு செல்லப்பட்டது.

வந்தது வஸ்திரம்... திருவரங்கம் விழாக்கோலம்..

இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர். இதனிடையே, நாளை நடைபெறும் சித்திரை திருத்தேரோட்டத்தின்போது இந்த வஸ்திரங்களை நம்பெருமாளுக்கும், தாயாருக்கு அணிவிக்கப்பட்டு பக்தர்களுக்கு காட்சியளிக்கிறார். நாளையதினம் திருத்தேரோட்டத்தின் போது பக்தர்கள் எளிதில் தரிசனம் செய்ய சிறப்பான வசதிகள் செய்யப்பட்டுள்ளதாகவும், பக்தர்களுக்குத் தேவையான குடிநீர் வசதி மற்றும் அனைத்து வசதிகளும் செய்யப்பட்டுள்ளதாக கோவில் இணை ஆணையர் மாரிமுத்து தெரிவித்தார்.

இதையும் படிங்க: ஸ்ரீரங்கத்தில் நாளை சித்திரைத் தேரோட்டம்..

Last Updated : Apr 28, 2022, 3:16 PM IST

ABOUT THE AUTHOR

...view details