திருச்சி மாவட்டம் மணப்பாறையை அடுத்த மைலாப்பூர் தாதம்பட்டியைச் சேர்ந்த சுமார் 15 பேர் திருச்சி அருகேயுள்ள கோலார்பட்டியில் நடைபெற்ற விழாவிற்கு வேன் மூலம் இன்று (ஆக. 25) காலை சென்றுள்ளனர்.
இந்நிகழ்ச்சியை முடித்துவிட்டு மதியம் வேன் மூலம் வீடு திரும்பியுள்ளனர். மணப்பாறையில் இருந்து மூன்று கிலோமீட்டர் தொலைவில் உள்ள அஞ்சாலி களம் என்ற இடத்தில் வேன் வந்து கொண்டிருந்த போது எதிர்பாராதவிதமாக நான்கு வழிச் சாலையின் குறுக்கே உள்ள கட்டையில் மோதி விபத்துக்குள்ளானது.
இந்த விபத்தில் பெண்கள், குழந்தைகள், முதியவர் உள்பட சுமார் 12 பேர் காயம் அடைந்தனர். இது குறித்து தகவல் அறிந்த மணப்பாறை காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விபத்தில் சிக்கியவர்களை மீட்டு முதலுதவி சிகிச்சைக்காக மதுரை சாலையில் உள்ள இரண்டு தனியார் மருத்துவமனைகளுக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும் கவிழ்ந்த வேனிலிருந்து டீசல் கசிவு ஏற்பட்டு சாலையில் ஓடியதால் தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
வேன் கவிழ்ந்து விபத்து: குழந்தைகள் உள்பட 12 பேர் காயம்!
திருச்சி: மணப்பாறை அருகே நான்கு வழிச்சாலையில் வேன் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் குழந்தைகள் உள்பட 12 பேருக்கு படுகாயம் ஏற்பட்டது.
வேன் விபத்து
இதையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த மணப்பாறை தீயணைப்பு துறையினர் தண்ணீரை பீய்ச்சி அடித்து மேற்கொண்டு அசம்பாவிதம் ஏற்படாமல் தடுத்தனர்.
இந்த விபத்து குறித்து மணப்பாறை காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.