தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

சமூகப் பொறுப்புணர்வு நிதியின்கீழ் கரோனா தடுப்பூசி முகாம் தொடக்கம்

பெரு நிறுவனங்களின் சமூகப் பொறுப்புணர்வு நிதியின்கீழ் கரோனா தடுப்பூசி செலுத்தும் முகாம் தொடக்க விழா இன்று திருச்சி அப்போலோ சிறப்பு மருத்துவமனையில் நடைபெற்றது.

தடுப்பூசி முகாம் தொடக்கம்
தடுப்பூசி முகாம் தொடக்கம்

By

Published : Aug 10, 2021, 10:20 AM IST

திருச்சி: பெரு நிறுவனங்களின் சிஎஸ்ஆர் நிதியின் மூலம் பொதுமக்களுக்கான இலவச கரோனா தடுப்பூசி செலுத்தும் திட்டத்தைத் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் சென்னையில் தொடங்கிவைத்தார்.

இதன் தொடர்ச்சியாக திருச்சி மாவட்டத்தில் நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சர் கே.என். நேரு, மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன், பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி ஆகியோர் இன்று (ஆக. 10) திருச்சி அப்போலோ சிறப்பு மருத்துவமனையில் தொடங்கிவைத்தனர்.

இந்நிகழ்ச்சியில், திருச்சி மாவட்ட ஆட்சியர் சிவராசு பேசுகையில், ”திருச்சி மாவட்டத்திலுள்ள பல்வேறு பெரு நிறுவனங்கள் தங்களது சிஎஸ்ஆர் நிதியை இதுபோன்ற பொன்னான காரணத்திற்காக கரோனா தடுப்பூசியினை இலவசமாகப் பொதுமக்களுக்கு வழங்க தங்கள் சிஎஸ்ஆர் நிதியைத் தாராளமாக முன்வந்து கொடுக்குமாறு கேட்டுக்கொண்டார்” என்றார்.

ABOUT THE AUTHOR

...view details