தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

அதிமுக மாநாட்டில் முதல்வர் ஸ்டாலின் குறித்து இழிவாக பாடல் பாடியது கண்டிக்கத்தக்கது- வாகை சந்திரசேகர் ஆவேசம்!

மறைந்த முன்னாள் திமுக தலைவர் கலைஞரின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு, கலை இலக்கிய பகுத்தறிவு பேரவை குறித்து ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு பின்னர் செய்தியாளர்களை சந்தித்த நடிகர் வாகை சந்திரசேகர் அதிமுக மாநாட்டில் முதல்வர் ஸ்டாலின் குறித்த அவதூறு கருத்துக்கு கண்டனங்களை தெரிவித்தார்.

கலைஞரின் நூற்றாண்டு விழா குறித்து திருச்சியில் ஆலோசனைக் கூட்டம்
கலைஞரின் நூற்றாண்டு விழா குறித்து திருச்சியில் ஆலோசனைக் கூட்டம்

By ETV Bharat Tamil Nadu Team

Published : Aug 24, 2023, 7:42 PM IST

கலைஞரின் நூற்றாண்டு விழா குறித்து திருச்சியில் ஆலோசனைக் கூட்டம்

திருச்சி: சத்திரம் பேருந்து நிலையம் அருகே உள்ள கலைஞர் அறிவாலயத்தில் மறைந்த முன்னாள் திமுக தலைவர் கலைஞரின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு, கலை இலக்கிய பகுத்தறிவு பேரவை குறித்து மாநில, மாவட்ட, மற்றும் மாநகர நிர்வாகிகளுக்கு ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இந்த ஆலோசனை கூட்டத்தில் குறிப்பிட்ட சில மாவட்ட மாநில நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்டார்கள். இந்த கூட்டத்திற்கு தலைமை தாங்கிய முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் வாகை சந்திரசேகர், நிர்வாகிகள் மத்தியில் பேசினார்.

அதில், "தமிழகத்தில் உள்ள முத்தமிழ் அறிஞர் கலைஞரின் கவிதைகள், திரைப்பட வசனங்களை ஒப்புவிக்கும் போட்டி நடத்தப்பட உள்ளது. இந்த போட்டியில் பள்ளியில் 9, 10 ,11 ,12 ஆம் வகுப்புகளில் பயிலும் மாணவ மாணவியரில் வெற்றி பெற்று முதல் 3 இடங்களை பிடிப்பவர்களை தேர்வு செய்து மாவட்ட அளவில் நடைபெறும் போட்டிக்கு அனுப்பி வைக்கப்படும். மேலும் மாவட்ட அளவில் வெற்றி பெறும் மாணவ மாணவியருக்கு முதல் பரிசாக ரூ.5 ஆயிரம், இரண்டாம் பரிசாக ரூ.3 ஆயிரம், மூன்றாம் பரிசாக ரூ.2ஆயிரம், வழங்கப்பட உள்ளது" என்றார்.

அதைத் தொடர்ந்து, "மாவட்ட அளவில் தேர்ந்தெடுக்கப்படும் மாணவ மாணவியர் மண்டல அளவிலான தேர்வுக்கு அழைத்துச் செல்லப்படுவர். மண்டல அளவில் முதல் பரிசாக ரூ. 10ஆயிரமும் இரண்டாம் பரிசாக ரூ 5 ஆயிரமும் மூன்றாம் பரிசாக ரூ.3ஆயிரம் ரொக்கத் தொகை பரிசாக வழங்கப்படும். மண்டல அளவில் வெற்றி பெறுவோர் மாநில அளவில் நடக்கும் போட்டிகளுக்கு அழைத்துச் செல்லப்படுவர். மாநில அளவில் அவர்களுக்கு முதல் பரிசாக ரூ. 25 ஆயிரமும், இரண்டாம் பரிசாக ரூ 15ஆயிரமும், மூன்றாம் பரிசாக ரூ.10ஆயிரம் ரொக்கத் தொகையை, தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்குவார்" என தெரிவித்தார்.

இதனை தொடர்ந்து நடிகர் வாகை சந்திரசேகர் செய்தியாளர்களை சந்தித்து பேசியதாவது, "மறைந்த திமுக முன்னாள் தலைவர் கலைஞர் கருணாநிதியின் சாதனைகள், வரலாற்று நிகழ்வுகளை மக்கள் மத்தியில் எடுத்த செல்ல திமுக கலை, இலக்கிய அணியின் சார்பாக கலைஞர் நூற்றாண்டு விழாவை வெகு சிறப்பாக நடத்த திட்டமிட்டு உள்ளோம். குறிப்பாக பள்ளி மாணவ, மாணிகளின் வாயிலாக பொது மக்களை சென்றடையும் வகையில் கலை நிகழ்ச்சி நடத்தப்பட உள்ளது" என்றார்.

மேலும், "தமிழ்நாட்டில் உள்ள அனைத்து மாவட்டங்களிலும் கலைஞர் கருணாநிதி மக்களுக்காக ஆற்றிய தொண்டுகள், திட்டங்கள், செயல்முறை ஆகியவற்றை விரிவாக எடுத்து உரைக்கும் வகையில் பல போட்டிகளும் நடக்க உள்ளது. மேலும் கடந்த 20 ஆம் தேதி மதுரையில் நடைபெற்ற அதிமுக எழுச்சி மாநாட்டில் , ஒருவர் மேடையில் முதல்வர் ஸ்டாலின், கனிமொழி எம்.பி , ஆகியோர்களை பற்றி ஆபாசமாக பாடல் பாடியது வன்மையாக கண்டிக்கதக்கது. மேலும் இந்த செயலின் போது அமைதியாக இருந்த அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி மற்றும் முக்கிய நிர்வாகிகள் மீது சட்டரீதியான நடவடிக்கை எடுக்க வேண்டும்" என தெரிவித்தார்.

இதையும் படிங்க:நாமக்கல்,நாகப்பட்டினம் மருத்துவமனைகளை திறக்க முடியாமல் போனதற்கு காரணம் - அமைச்சர் சுப்பிரமணியன் பகீர் தகவல்

ABOUT THE AUTHOR

...view details