தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

உ.பி. தொழிலாளர்கள் 1,425 பேர் ரயிலில் அனுப்பிவைப்பு - UP migrate Workers

திருச்சியிலிருந்து உ.பி. தொழிலாளர்கள் 1,425 பேரை ஆட்சியர் சிவராசு ரயிலில் அனுப்பிவைத்தார்.

up-natives-1425
up-natives-1425

By

Published : May 18, 2020, 11:14 AM IST

கரோனா வைரஸ் (தீநுண்மி) பரவல் காரணமாக ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. அந்த உத்தரவில் தற்போது தளர்வுகள் ஏற்படுத்தப்பட்டுள்ளதால், தமிழ்நாட்டில் பணிபுரியும் குடிபெயர்ந்த தொழிலாளர்களை அவர்களின் சொந்த ஊருக்கு அனுப்ப அரசு சார்பில் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுவருகின்றன.

அதன்படி, உத்தரப் பிரதேச மாநிலத்தைச் சேர்ந்த தொழிலாளர்கள் 1,425 பேர் திருச்சி ரயில் நிலையத்திலிருந்து சிறப்பு ரயில் மூலம் அனுப்பிவைக்கப்பட்டனர்.

அவர்களில் அரியலூரிலிருந்து வந்தவர்கள் 671 பேர், பெரம்பலூரிலிருந்து வந்தவர்கள் 120 பேர், கரூரிலிருந்து வந்தவர்கள் 254 பேர், திருச்சியிலிருந்து வந்தவர்கள் 984 பேர் ஆவார்கள்.

இந்த நிகழ்வில் ஆட்சியர் சிவராசு கலந்துகொண்டு தொழிலாளர்களைப் பாதுகாப்பாகச் செல்லும்படி அறிவுரை கூறி அனுப்பிவைத்தார்.

இதையும் படிங்க:புலம்பெயர்ந்த தொழிலாளர்களுக்கு 500 பேருந்துகள் ஏற்பாடு - பிரியங்கா காந்தி!

ABOUT THE AUTHOR

...view details