தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

பல்கலை அளவிலான பேட்மிண்டன்-டேபிள் டென்னிஸ்: திருச்சி பிஷப் ஹீபர் கல்லூரி சாம்பியன்! - பிஷப் ஹீபர் கல்லூரி

திருச்சி: பாரதிதாசன் பல்கலைக்கழக கல்லூரிகளுக்கு இடையிலான மகளிர் பேட்மிண்டன் மற்றும் டேபிள் டென்னிஸ் போட்டிகளில் திருச்சி பிஷப் ஹீபர் கல்லூரி சாம்பியன் பட்டம் பெற்றது.

college team champion

By

Published : Aug 28, 2019, 2:41 PM IST

திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழகத்தில் திருச்சி, தஞ்சை, கரூர், புதுக்கோட்டை, நாகை, திருவாரூர், பெரம்பலூர், அரியலூர் ஆகிய 8 மாவட்டங்களுக்குட்பட்ட கல்லூரிகளுக்கு இடையிலான மாணவியர்களுக்கான பேட்மிண்டன் மற்றும் டேபிள் டென்னிஸ் போட்டிகள் திருச்சி பிஷப் ஹீபர் கல்லூரியில் நடைபெற்றது.

16 அணிகள் பங்கேற்ற பேட்மிண்டன் விளையாட்டின் இறுதி போட்டியில் திருச்சி பிஷப் ஹீபர் கல்லூரி மற்றும் கும்பகோணம் அரசு மகளிர் கல்லூரிகள் மோதின. இப்போட்டியில் திருச்சி அணி வெற்றி பெற்று கோப்பையை கைப்பற்றியது.

சாம்பியன் பட்டம் வென்ற மகிழ்ச்சியில் கல்லூரி மாணவிகள்

அதைத்தொடர்ந்து 12 அணிகள் பங்கேற்ற டேபிள் டென்னிஸ் இறுதிபோட்டியில் பிஷப் ஹீபர் கல்லூரி, குழந்தை இதயா மகளிர் கல்லூரியை வீழ்த்தி கோப்பையை கைப்பற்றியது.

பேட்மிண்டன் மற்றும் டேபிள் டென்னிஸ் போட்டியில் முதல் இடம் பிடித்து கோப்பையை கைப்பற்றிய பிஷப் ஹீபர் கல்லூரி மாணவியர்களுக்கு கல்லூரி முதல்வர் பால் தயாபரன், உடற்கல்வி இயக்குனர் பால்ராஜ் ஆகியோர் தங்களது வாழ்த்துகளை தெரிவித்தனர்.

ABOUT THE AUTHOR

...view details