தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

"எனக்கு பரிசுன்னா இதுதான் வேணும்" - மீண்டும் வலியுறுத்திய உதயநிதி - பள்ளி கல்வித்துறை

இன்றைக்கு மகளிர் சுய உதவி குழுக்கள் மிகப்பெரிய அளவில் வளர்ச்சி அடைந்து கிராமப்புறங்களில் சத்தமில்லாமல் ஒரு மிகப்பெரிய தொழில் புரட்சியை செய்து கொண்டிருக்கின்றன. மிகப்பெரிய பிராண்ட் தயாரிக்கின்ற பொருட்கள் மீது வராத நம்பிக்கை, கிராமத்தில் மகளிர் சுய உதவி குழுக்கள் தயாரிக்கின்ற அந்த பொருட்கள் மீது அந்த நம்பிக்கை வந்திருக்கின்றது என உதயநிதி ஸ்டாலின் கூறியுள்ளார்.

Etv Bharat
Etv Bharat

By

Published : Jun 20, 2023, 2:00 PM IST

மகளிர் சுய உதவி குழுக்கள் கிராமப்புறங்களில் மிகப்பெரிய தொழில் புரட்சியை செய்து கொண்டிருக்கின்றது

திருச்சி: ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை சார்பில் வாழ்ந்து காட்டுவோம் கூட்டத்திற்கு உற்பத்தியாளர் மற்றும் சந்தையாளர்கள் ஒருங்கிணைப்பு கூட்டம் திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் சாலையில் உள்ள தனியார் நட்சத்திர ஹோட்டல் அரங்கில் நடைபெற்றது. இந்நிகழ்வில் சிறப்பு விருந்தினர்களாக விளையாட்டுத்துறை மற்றும் சிறப்பு திட்ட செயளாக்கத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி ஆகியோர் கலந்து கொண்டனர்.

முன்னதாக உற்பத்தியாளர்களால் சந்தைப்படுத்துவதற்கான கண்காட்சியை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் திறந்து வைத்து பார்வையிட்டு,
உற்பத்தி சந்தையில் வெற்றி பெற்றவர்களுடைய புத்தக தொகுப்பை வெளியிட்டார். இத்திட்டம் 53 உற்பத்தியாளர்களை ஒன்றிணைத்து செயல்படுத்தப்பட்டு வருகிறது. இந்நிகழ்வில் சிறப்பு திட்ட செயலாக்குத்துறை முதன்மை செயல் அலுவலர் திவ்யதர்ஷினி, ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி துறை முதன்மை செயலாளர் முனைவர் செந்தில்குமார் ஆகியோர் பங்கேற்றனர்.

இந்த நிகழ்ச்சியில் பேசிய அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், "மகளிர் சுய உதவி குழுக்களை சேர்ந்த உற்பத்தியாளர்கள் கூட்டமைப்பு மற்றும் அவர்கள் தயாரிக்கின்ற பொருட்களை வாங்குவதற்கான சந்தை குழுக்களை இணைக்கின்ற வகையில் இந்த கூட்டம் திருச்சியில் நடைபெறுகிறது.

பொருளாதார சுதந்திரமே பெண்களுக்கு உண்மையான சுதந்திரம் என்று தந்தை பெரியார் கூறுவார், அந்த வகையில் மகளிர் முன்னேற்றத்திற்காக மகளிர் சுய உதவி குழுக்கள் என்னும் ஒரு முக்கியமான முன்னேடுப்பை இந்திய நாட்டிலேயே முதன்முதலாக 1989 ஆம் ஆண்டு தமிழகத்தில் முன்னால் முதலமைச்சர் கருணாநிதியால் இந்த திட்டம் உருவாக்கப்பட்டது. முதலில் தர்மபுரி மாவட்டத்தில் தொடங்கப்பட்ட இந்த திட்டம் படிப்படியாக அனைத்து மாவட்டங்களுக்கும் விரிவாக்கம் செய்யப்பட்டு இன்றைக்கு தமிழ்நாட்டில் சுமார் 7 லட்சத்து 22,000 கொடுத்தால் செயல்பட்டுக் கொண்டிருக்கின்றனர்.

இன்றைக்கு மகளிர் சுய உதவி குழுக்கள் மிகப்பெரிய அளவில் வளர்ச்சி அடைந்து கிராமப்புறங்களில் சத்தமில்லாமல் ஒரு மிகப்பெரிய தொழில் புரட்சியை செய்து கொண்டிருக்கின்றன. மகளிர் சுய உதவி குழுக்கள் தயாரிக்கும் பொருட்களானது ஒரு தனி முக்கியத்துவம் வாய்ந்தது. மிகப்பெரிய பிராண்ட் தயாரிக்கின்ற பொருட்கள் மீது வராத நம்பிக்கை ஒரு கிராமத்தில் மகளிர் சுய உதவி குழுக்கள் தயாரிக்கின்ற அந்த பொருட்கள் மீது அந்த நம்பிக்கை வந்திருக்கின்றது. அந்த அளவுக்கு உங்களுடைய பொருட்கள் தரமானதாக இருக்கின்றது.

எனக்கு யாருக்காவது பரிசளிக்க விரும்பினால், கூட அவர்களிடம் நான் அன்பு வேண்டுகோளாக அடிக்கடி சொல்வது தயவு செய்து பூங்கொத்து , பொன்னாடையை தவித்து விடுங்கள். அதற்கு பதிலாக புத்தகங்கள் கொடுங்கள் இல்லையென்றால் மகளிர் சுய உதவி குழுக்கள் தயாரிக்கும் பொருட்களை எனக்கு பரிசாக நீங்கள் கொடுங்கள் என தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றேன்" என்றார்.

இதையும் படிங்க:ரேஷன், ஆதார் உள்ளிட்ட அனைத்து அட்டைகளையும் அரசிடம் ஒப்படைக்க முடிவெடுத்த ஜவ்வாது மலைக் கிராம மக்கள்

ABOUT THE AUTHOR

...view details