திருச்சி தனியார் கல்லூரியில் தமிழர்களின் பாரம்பரிய கலாச்சாரத்தை வெளிப்படுத்தும் வகையில் பொங்கல் திருவிழா கொண்டாடப்பட்டது. இதில் திரைப்பட இசையமைப்பாளரும், நடிகருமான ஹிப் பாப் தமிழா ஆதி சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டார்.
இதில் மாணவ, மாணவிகள் அனைவரும் பாரம்பரிய உடையணிந்து வந்து அசத்தினர். இந்த நிகழ்வில் தேவராட்டம் ஆடியபடி, உழவுத் தொழிலுக்கான விலங்குகள் காட்சிபடுத்தப்பட்டு தமிழரின் வாழ்வியல், பாரம்பரியத்தை பறைசாற்றும் கலாச்சார பேரணி நடைபெற்றது
மேலும், இயற்கை விஞ்ஞானி திருப்பதி தங்கசாமி, மண்பாண்ட கலைஞர் ராமு, தேவராட்ட கலைஞர் ரவிக்குமார் ஆகியோருக்கு தமிழர் பண்பாட்டு விருதுகள் 2020 வழங்கப்பட்டது.
இந்த நிகழ்ச்சியில் பேசிய ஆதி, ஜல்லிக்கட்டுப் போராட்டத்திற்கு முன்பாகவே ஜல்லிக்கட்டு பற்றிய பாடல் உருவாக்கப்பட்டது. அதன் பின்னரே ஜல்லிக்கட்டுப் போராட்டம் நடைபெற்றது.