திருச்சி மாவட்டம் சமயபுரத்தில் ஐந்து ஏக்கர் பரப்பளவில் வாரந்தோறும் சனிக்கிழமை அன்று ஆட்டுச்சந்தை நடைபெறுவது வழக்கம். இந்த வாரச் சந்தைக்கு திருச்சி, துறையூர், முசிறி, மண்ணச்சநல்லூர், லால்குடி எனப் பல மாவட்டங்களிலிருந்து ஆடுகள் விற்பனைக்காக கொண்டுவரப்படும்.
ஆடு வளர்ப்பவர்களும், வியாபாரிகளும் இங்கு வந்து ஆடுகளை வாங்கியும், விற்றும் செல்வார்கள். இந்தச் சூழ்நிலையில் தமிழர் திருநாளான பொங்கல் திருநாள் வரும் 14ஆம் தேதிமுதல் கொண்டாடப்பட உள்ளது.
இதையடுத்து சமயபுரம் மாட்டுச்சந்தை இன்று (ஜன. 09) வழக்கம்போல் கூடியது, மேலும் வழக்கத்தைவிட அதிகளவில் வர்த்தகம் நடைபெற்றது. இரண்டாயிரத்துக்கும் மேற்பட்ட ஆடுகள் இங்கு விற்பனைக்கு வந்தன. ஆடுகளை வாங்க மூவாயிரத்திற்கும் மேற்பட்ட வியாபாரிகள் கூடினர். ஆடுகள் வரத்தும் அதிகளவில் இருந்தன.
கடந்த ஆண்டு பொங்கல் விழாவில் நடந்த விற்பனையைவிட இந்த ஆண்டு விற்பனை அதிகமாக நடந்துள்ளது. சுமார் ஒரு கோடி ரூபாய்க்கும் மேல் வர்த்தகம் நடைபெற்றதாக வியாபாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
இதையும் படிங்க... பறவை காய்ச்சல் எதிரொலி: கடும் சரிவை சந்திக்கும் கறிக்கோழி விற்பனை!