தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

ரயில்வே தனியார்மயமாக்கலை எதிர்த்து வேலை நிறுத்தம்! - தனியார் மயமாக்கல்

திருச்சி: ரயில்வே தனியார்மயமாக்கலை எதிர்த்து வேலை நிறுத்த போராட்ட அறிவிப்பு விரைவில் வெளியிடப்படும் என்று எஸ்ஆர்இஎஸ் பொதுச்செயலாளர் சூரியப்பிரகாசம் கூறியுள்ளார்.

railway

By

Published : Jul 16, 2019, 7:31 AM IST

மத்திய பேருந்து நிலையம் அருகே உள்ள தனியார் ஓட்டலில் சதர்ன் ரயில்வே எம்பிளாயிஸ் சங்கம் (எஸ்ஆர்இஎஸ்) சார்பில் திருச்சி, மதுரை, சேலம் கோட்ட நிர்வாகிகள் கலந்தாய்வு கூட்டம் நடந்தது. இந்தக் கூட்டத்தில் சங்கப் பொதுச்செயலாளர் சூரியபிரகாசம், நிர்வாக தலைவர் பாலகிருஷ்ணன் ஆகியோர் சிறப்புரை ஆற்றினர்.

இந்தக் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் குறித்து சூரியபிரகாசம் செய்தியாளர்களிடம் கூறுகையில், ரயில்வே போக்குவரத்து, ரயில் நிலையங்கள், உற்பத்திப் பிரிவு, பிரின்டிங் பிரஸ், ஒர்க்ஷாப், ஓபன் லைன் ஆகியவற்றை தனியாருக்கு தாரைவார்ப்பதை தடுத்து நிறுத்திட வேண்டும். 30 வருடம் சர்வீஸ் அல்லது 55 வயது நிறைவடைந்த தொழிலாளர்களை கட்டாய ஓய்வில் அனுப்ப நினைப்பதை நிறுத்தவேண்டும். புதிய பென்சன் திட்டத்தை ரத்து செய்து பழைய பென்சன் திட்டத்தை தொடர்ந்திட வேண்டும் என்றார்.

ரயில்வே தனியார்மயமாக்கலை எதிர்த்து வேலை நிறுத்தம்

ரயில்வேயை தனியார்மயமாக்குவதால் பொதுமக்களுக்கும், ரயில்வே தொழிலாளர்களுக்கும் பாதிப்பு ஏற்படும் என தெரிவித்த சூரியபிரகாசம், ரயில்வேக்கு என இருந்த தனி பட்ஜெட் ஒழிக்கப்பட்டுவிட்டதால், பொது பட்ஜெட்டில் ரயில்வே துறைக்கு என்னென்ன திட்டங்கள் வெளியிடப்பட்டன என்பது யாருக்குமே தெரியவில்லை. மேக் இன் இந்தியா திட்டம் என்று கூறிவிட்டு வெளிநாடுகளில் ரயில் இன்ஜின்களை வாங்குகின்றனர். ஏற்கனவே ரயில் தொழிற்சங்கங்கள் அறிவித்திருந்த வேலை நிறுத்தப் போராட்டத்தை சிபிஐ மூலம் மிரட்டி கைவிட செய்தது. ஆனால் இந்த முறை கண்டிப்பாக வேலை நிறுத்தப் போராட்டம் நடைபெறும் என தெரிவித்தார்.

மேலும் அவர், எஸ்ஆர்இஎஸ் முன்னெடுக்கும் இந்த போராட்டத்தில் அனைத்து தொழிற்சங்கங்களும் கலந்துகொள்ளும். வேலை நிறுத்தம் குறித்த அறிவிப்பு அடுத்த மாதம் வெளியிடப்படும். நாடு முழுவதும் 17 கோட்டங்கள் உள்ளது. அனைத்து கோட்ட சங்கங்களுடன் ஆலோசனை மேற்கொண்டு போராட்ட அறிவிப்பு வெளியிடப்படும் என்றார்.

ABOUT THE AUTHOR

...view details