திருச்சி: திருச்சி-கரூர் பைபாஸ் சாலையில் கேடி ஜங்ஷன் அருகே பிரபல பிரணவ் ஜுவல்லரி செயல்பட்டு வருகிறது. இதன் உரிமையாளர் மதன். இக்கடையில் மார்ட்டின் என்பவர் பணியாற்றினார்.
இந்நிலையில், சில நாள்களுக்கு முன்பு மதன் சென்னைக்கு சென்று 1.5 கிலோ நகைகளை வாங்கிவிட்டு திருச்சிக்கு திரும்பி கொண்டிருந்தார். ஆனால், மார்ட்டின் திரும்ப வரவில்லை. இதுகுறித்து, மதன் உறையூர் குற்றப்பிரிவு காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் அடிப்படையில் காவல் துறையினர் தீவிர விசாரணை நடத்தினர்.