தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

பார்வை மாற்றுத்திறனாளிகளுடன் கிறிஸ்துமஸ் கொண்டாடிய எம்.பி - Su. Thirunavukkarasar

திருச்சி: மணிகண்டம் அருகே பார்வை மாற்றுத்திறனாளிகளுடன் நாடாளுமன்ற உறுப்பினர் திருநாவுக்கரசர் கிறிஸ்துமஸ் கொண்டாடினார்.

Christmas with blind peoples
Trichy MP celebrates Christmas with blind peoples

By

Published : Dec 22, 2020, 9:45 PM IST

திருச்சி மாவட்டம் மணிகண்டம் அருகே டான்பாஸ்கோ அலைகள் மீடியா கல்லூரி வளாகத்தில் ஒருங்கிணைந்த கிறிஸ்துமஸ் விழா கொண்டாடப்பட்டது. இதில் திருச்சி நாடாளுமன்ற உறுப்பினர் திருநாவுக்கரசர் கலந்துகொண்டு 300 பார்வையற்றவர்களுக்கு புடவை, வேட்டி, துண்டு ஆகியவற்றை வழங்கி, பார்வை மாற்றுத்திறனாளிகளுடன் கேக் வெட்டி கிறிஸ்துமஸ் விழாவை கொண்டாடினார்.

விழாவில் காங்கிரஸ் கட்சியின் மாநில சிறுபான்மை பிரிவு துணைத் தலைவர் பேட்ரிக் ராஜ்குமார், ஓய்வுபெற்ற பேராசிரியர் பெஞ்சமின் இளங்கோவன், பொதுக்குழு உறுப்பினர் ரெக்ஸ், மாவட்ட செயலாளர் கோவிந்தராஜன், அலைகள் மீடியா கல்லூரி உறுப்பினர்கள் கலந்துகொண்டனர்.

இதையும் படிங்க:ஆற்று வெள்ளத்தில் உடலை சுமந்து செல்லும் கிராம மக்கள்!

ABOUT THE AUTHOR

...view details