தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

மண்ணச்சநல்லூர் பகவதி அம்மன் கோயில் திருவிழா கோலாகலமாக தொடக்கம் - manachanallur

திருச்சியில் உள்ள மண்ணச்சநல்லூர் பகவதி அம்மன் கோயிலின் ஆண்டு திருவிழா தொடங்கி விமரிசையாக நடைபெற்று வருகிறது.

மண்ணச்சநல்லூர் பகவதி அம்மன் கோயில் திருவிழா தொடங்கியது!
மண்ணச்சநல்லூர் பகவதி அம்மன் கோயில் திருவிழா தொடங்கியது!

By

Published : Dec 31, 2022, 12:54 PM IST

திருச்சியில் உள்ள மண்ணச்சநல்லூர் பகவதி அம்மன் கோயிலின் ஆண்டு திருவிழா தொடங்கி விமரிசையாக நடைபெற்று வருகிறது

திருச்சி:மண்ணச்சநல்லூரில் உள்ள அருள்மிகு பகவதி அம்மன் திருக்கோயில் ஆண்டு திருவிழா டிச.29ஆம் தேதி கம்பம் நடுதலுடன் தொடங்கியது. தொடர்ந்து கரகம் பாலித்தல் நிகழ்வு நடைபெற்றது. இதனையடுத்து இன்று (டிச.31) கணபதி ஹோமத்தோடு முதல் நாள் திருவிழா நடைபெற்றது.

பின்னர் பகவதி அம்மனுக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு, பொங்கல் படையலிட்டு சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டது. தொடர்ந்து தீபாராதனைகள் காண்பிக்கப்பட்டது. இந்த நிகழ்வில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

இதையும் படிங்க:ஸ்ரீரங்கம் வைகுண்ட ஏகாதசி: பகல்பத்து 9ஆம் நாள் உற்சவம்!

ABOUT THE AUTHOR

...view details