திருச்சி மாவட்டத்தில் இன்று ஒரே நாளில் 83 பேருக்கு கரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன்மூலம் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 10 ஆயிரத்து 429ஆக அதிகரித்துள்ளது. திருச்சி மாவட்டத்தில் நேற்று (செப். 28) வரை 769 பேர் சிகிச்சை பெற்று வந்தனர்.
இன்று ஒரே நாளில் 73 பேர் பூரண குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதுவரை மாவட்டத்தில் 9 ஆயிரத்து 505 பேர் குணமடைந்துள்ளனர்.