தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

திருச்சியில் மேலும் 131 பேருக்கு கரோனா தொற்று உறுதி - பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை

திருச்சியில் நேற்று (ஜூலை 26) 131 பேருக்கு கரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 3,420ஆக அதிகரித்துள்ளது.

trichy had 131 new corona positive cases today
trichy had 131 new corona positive cases today

By

Published : Jul 27, 2020, 9:06 AM IST

தமிழ்நாடு முழுவதும் நேற்று (ஜூலை 26) ஒரே நாளில் 6,986 பேர் கரோனா வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்டனர். மேலும், தொற்றால் பாதிக்கப்பட்ட 85 பேர் நேற்று உயிரிழந்துள்ளனர். இதன் மூலம் தமிழ்நாட்டில் கரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 2 லட்சத்து 13 ஆயிரத்து 723ஆக உயர்ந்துள்ளது. உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 3,494ஆக அதிகரித்துள்ளது.

அந்த வகையில், திருச்சி மாவட்டத்தில் நேற்று ஒரே நாளில் 131 பேருக்கு கரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் மாவட்டத்தில் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 3,420ஆக அதிகரித்துள்ளது.

திருச்சி மாவட்டத்தில் நேற்று வரை 1,136 பேர் தொற்றால் பாதிக்கப்பட்டு, சிகிச்சை பெற்று வந்த நிலையில், நேற்று 65 பேர் பூரண குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதன் மூலம் மாவட்டத்தில் குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 1,161ஆக அதிகரித்துள்ளது.

கரோனா தொற்று காரணமாக நேற்று ஒருவர் உயிரிழந்தார். இதனால் மாவட்டத்தில் உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 58ஆக அதிகரித்துள்ளது.

இதையும் படிங்க:வேலூரில் 5 ஆயிரத்தைக் கடந்தது கரோனா பாதிப்பு

ABOUT THE AUTHOR

...view details