திருச்சி:தமிழகத்தில் உள்ள அம்மன் ஸ்தலங்களில் சமயபுரம் மாரியம்மன் கோயில் மிகவும் பிரசித்திபெற்றது. இக்கோயிலில் ஆண்டுதோறும் சித்திரை தேரோட்ட திருவிழா வெகு விமரிசையாக நடைபெறுவது வழக்கம். இந்தாண்டுக்கான சித்திரை தேர் திருவிழா கடந்த 10ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.
இதனைத் தொடர்ந்து அம்மன் தினமும் பல்வேறு வாகனங்களில் வீதி உலா நடைபெற்றது. முக்கிய நிகழ்வான தேர்வடம் பிடித்தல் நிகழ்ச்சி கடந்த 19 ம் தேதி வெகு விமரிசையாக நடைபெற்றது. இந்நிலையில் தேர் முடிந்து 8 ம் நாள் திருவிழாவும், சித்திரை திருவிழாவின் நிறைவு விழா நேற்று இரவு அம்மன் மூலஸ்தானத்திலிருந்து வசந்த மண்டபம் புறப்பட்டு சென்று திருமஞ்சனமும் சிறப்பு அபிஷேகமும் நடைபெற்றது.