திருச்சி நீதிமன்ற வளாகத்தில் நான்காவது கூடுதல் சார்பு நீதிமன்றத்தை மாவட்ட ஆட்சியர் சிவராசு, முதன்மை மாவட்ட அமர்வு நீதிபதி முரளி சங்கர் ஆகியோர் இன்று குத்து விளக்கேற்றி தொடங்கி வைத்தனர்.
அதன்பின் பேசிய ஆட்சியர் சிவராசு, தமிழ்நாடு அரசு வழக்குகளை விரைவாக முடிக்க வேண்டும் என்பதற்காக புதிய நீதி மன்றங்கள் கூடுதலாக கட்டித் தரப்படுகின்றன. தமிழ்நாடு அரசு நீதிமன்றங்களின் எண்ணிக்கையை அதிகரித்துள்ளது. புதிய நீதிமன்றங்களை ஏற்படுத்துவதால் வழக்குகளை விரைந்து முடிக்க உதவும். முதன்மை மாவட்ட நீதிபதி அவர்களின் கோரிக்கையின்படி லால்குடி, ஸ்ரீரங்கம் மெயின்ரோட்டில் வருவாய் துறையின் மூலம் இடம் கண்டறியப்பட்டு இரண்டு ஏக்கர் அளவில் புதிய நீதிமன்ற கட்டடம் கட்டுவதற்கு விரைவில் இடம் வழங்கப்படும் எனக் கூறினார்.