திருச்சி மத்திய சிறையில் பணியாற்றும் சிறைக் காவலர், சிறை பாதுகாவலர்களுக்கு சிறைச்சாலை வளாகத்திலேயே குடியிருப்பு உள்ளது. இந்தக் குடியிருப்பில் சிறை பாதுகாவலர்கள், கண்காணிப்பாளர்கள் குடும்பத்துடன் வசித்து வருகின்றனர். இந்த நிலையில் சிறையில் பணியாற்றும் சிறை பாதுகாவலர்கள் 20 பேருக்கு சமீபத்தில் பணியிட மாறுதல் கிடைத்துள்ளது.
அதனால் அவர்கள் 20 பேரும் இருசக்கர வாகனத்தில் சிறை குடியிருப்பு பகுதிக்குள் சுற்றி வந்து கொண்டாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். அதனை சிறை குடியிருப்புவாசிகள் செல்போனில் பதிவு செய்து வாட்ஸ்அப், ஃபேஸ்புக்கில் பதிவிட்டுள்ளனர். அந்தக் கணொலியின் அடிப்படையில் கே.கே.நகர் காவல்நிலைய ஆய்வாளர், சிறை பாதுகாவலர்கள் 20 பேர் மீதும் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகிறார்.
மத்திய சிறையில் கொண்டாட்டம்; 20 பாதுகாவலர்கள் மீது வழக்கு - மத்திய சிறை பாதுகாவலர்கள் மீது வழக்கு
திருச்சி: மத்திய சிறையில் பணியிட மாறுதலை கொண்டாடிய 20 சிறை பாதுகாவலர்கள் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
trichy-central-jail-warden
இதையும் படிங்க:திருச்சியில் படுகாயங்களுடன் மீட்கப்பட்ட சிறுமி உயிரிழப்பு