திருச்சி மாவட்டம் மணப்பாறை வழியாக குளித்தலையிலிருந்து துவரங்குறிச்சிவரை காவிரி கூட்டுக் குடிநீர் திட்டம் சுமார் மூன்று அடி விட்டம் கொண்ட குழாய் மூலம் அனுப்பப்படுகிறது.
இந்தக் குழாய், குளித்தலை சாலையில் கலிங்கப்பட்டி பிரிவு சாலை பகுதியில் இன்று திடீரென பழுது காரணமாக உடைப்பு ஏற்பட்டு குடிநீர் வெளியேறியது. சுமார் ஒரு மணி நேரத்திற்கு மேலாக, குழாயில் குடிநீர் செல்கின்ற அழுத்ததின் காரணமாக லட்சக்கணக்கான லிட்டர் நீர் வெளியேறி ஓடையில் ஆறாக ஓடியது.