தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

மக்களை நடுத்தெருவில் நிறுத்தியவர் மோடி - திருச்சி அமமுக வேட்பாளர் தாக்கு!

திருச்சி: ஒரே நாளில் ரூ.500, 1000 நோட்டுகள் செல்லாது எனக்கூறி பணத்துக்காக மக்களை நடுத்தெருவில் நிறுத்தியவர் மோடி என திருச்சி நாடாளுமன்றத் தொகுதி அமமுக வேட்பாளர் சாருபாலா தொண்டைமான் தெரிவித்துள்ளார்.

அ.ம.மு.க வேட்பாளர் சாருபாலா தொண்டைமான்

By

Published : Apr 1, 2019, 5:35 PM IST

Updated : Apr 1, 2019, 8:39 PM IST

திருச்சி மாவட்டம் மணப்பாறை, சித்தா நத்தம் சமுத்திரம், கே.பெரியபட்டி, தொப்பம்பட்டி, கலிங்கப்பட்டி உள்ளிட்ட பல பகுதிகளில் அமமுக வேட்பாளர் சாருபாலா தொண்டைமான், முன்னாள் அரசு கொறடா மனோகரன் ஆகியோர் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டனர்.

அப்போது அமமுக வேட்பாளர் சாருபாலா கூறியதாவது,

"பொதுமக்களின் வாழ்வாதாரத்தில் சமையல் எரிவாயு, பெட்ரோல் டீசல் விலையை ஏற்றி சிரமப்பட வைத்ததும், ஒரே நாளில் ரூ.500, ரூ.1000 நோட்டுகள் செல்லாது என்று கூறி நம்மை பணத்துக்காக நடுத்தெருவில் நிறுத்தியதும் பிரதமர் மோடி. அதுமட்டுமல்லாமல் இரண்டு கோடி இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு தருவதாகவும், ஒவ்வொரு குடிமகனுக்கும் வங்கி கணக்கில் ரூ.15 லட்சம் அளிப்பதாகவும் கூறி எதையும் செய்யாமல் ஏமாற்றியதும் மோடி அரசு தான். தமிழ்நாட்டிலுள்ள எடப்பாடி அரசு, மோடி அரசுக்கு அடிமையாக இருக்கிறது. எடப்பாடி அரசு வெறும் ஊழலுக்குபணிகின்ற அரசாக-பணம் சம்பாதிக்கும் அரசாக உள்ளது" எனத் தெரிவித்தார்.

வாக்கு சேகரிப்பில் ஈடுபட்ட அ.ம.மு.க வேட்பாளர் சாருபாலா தொண்டைமான்

இதனையடுத்து, செய்தியாளர்கள் சந்திப்பில் சாருபாலா பேசுகையில்,

"நான் மட்டும்தான் உள்ளூர் வேட்பாளர். திருநாவுக்கரசர் மற்றும் இளங்கோவன் எதற்காக தங்கள் சொந்த ஊர்களை விட்டு வெளியூர்களில் வந்து வேட்பாளர்களாக போட்டியிடுகின்றனர் என்பது தெரியவில்லை. திருச்சி மக்களின் பிரச்னைகளை நான் நன்கு அறிந்தவள். டிடிவி தலைமையிலான அரசு விரைவில் அமையும். மோடி-எடப்பாடி அரசுகள் தூக்கி எறியப்படும்" என அவர் கூறினார்.


Last Updated : Apr 1, 2019, 8:39 PM IST

ABOUT THE AUTHOR

...view details