தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

உள்ளாட்சித் தேர்தல்: அதிமுக கூட்டணியில் தொகுதிப் பங்கீடு - அதிமுக தொகுதிப் பங்கீடு

திருச்சி: உள்ளாட்சித் தேர்தலில் திருச்சி அதிமுக கூட்டணி கட்சிகளின் தொகுதிப் பங்கீடு அறிவிக்கப்பட்டுள்ளது.

Trichy
Trichy ADMK Seats Sharing

By

Published : Dec 14, 2019, 3:41 PM IST

திருச்சி மாநகர் மாவட்ட அதிமுக அலுவலகத்தில் கூட்டணி கட்சி நிர்வாகிகளுடன் அமைச்சர்கள் வெல்லமண்டி நடராஜன், வளர்மதி, மாநகர் மாவட்ட செயலாளர் குமார், அமைப்புச் செயலாளர் பரஞ்சோதி ஆகியோரது முன்னிலையில் பேச்சுவார்த்தை நடைபெற்றது.

இதில் தேமுதிகவிற்கு அந்தநல்லூர் ஒன்றியத்தில் ஆறு, ஏழாவது வார்டும் மணிகண்டம் ஒன்றியத்தில் நான்கு, 12ஆவது வார்டும் ஒதுக்கீடு செய்யப்பட்டது. தமாகாவுக்கு மணிகண்டம் ஒன்பதாவது வார்டும் அந்தநல்லூரின் 10ஆவது வார்டும் ஒதுக்கீடு செய்யப்பட்டது.

அதிமுக கூட்டணியில் தொகுதிப் பங்கீடு

மீதமுள்ள வார்டுகளில் அதிமுக வேட்பாளர்களைப் போட்டியிடச் செய்வது என்று முடிவெடுக்கப்பட்டது. கூட்டணிக் கட்சிகளின் வெற்றிக்கு அனைவரும் ஒன்றிணைந்து பாடுபட வேண்டும் என்றும் உறுதி ஏற்கப்பட்டது.

இதையும் படிக்க: ஏர்கலைப்பையுடன் வேட்பு மனு தாக்கல் செய்த விவசாயி!

ABOUT THE AUTHOR

...view details