திருச்சி: துறையூர் அருகே தென்புறநாடு பஞ்சாயத்துக்குள்பட்ட பகுதிகளில் சேம்பூர், பெரும்பரப்பு, சித்தூர் உள்ளிட்ட 16 மலை கிராமங்கள் உள்ளன. அவற்றில் நான்காயிரத்து 16 பேர் வசிக்கின்றனர்.
இந்தக் கிராமங்களுக்குத் தடுப்பூசி செலுத்தும் பணிக்காக நான்கு மருத்துவக் குழுவினர் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். ஆனால் இந்தக் கிராமங்களில் பெரும்பாலானோர் தடுப்பூசி செலுத்த மறுப்புத் தெரிவித்துவருகின்றனர். தடுப்பூசி குறித்து முழுமையாக விழிப்புணர்வு ஏற்படுத்திய நிலையிலும், அவர்களுக்கு தடுப்பூசி குறித்த பயம் விலகவில்லை.
தடுப்பூசி செலுத்திக் கொண்டவர்களின் விவரம்
இந்தக் கிராமங்களில் அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள், தனியார் தொழிற்சாலை ஊழியர்கள், 100 நாள் வேலை திட்டப் பணியாளர்கள் என நிபந்தனை விதிக்கப்பட்டவர்கள் மட்டுமே, வேறுவழியின்றி தடுப்பூசி செலுத்திக் கொண்டுள்ளனர். ஆனால், விவசாய பணிகளில் ஈடுபடுவோர், வேலையிருப்பதாகக் கூறி தட்டிக்கழித்துள்ளனர்.
சிலர் மருத்துவக்குழுவைக் கண்டதும் வீடுகளுக்குள் சென்று ஒளிந்துகொள்கின்றனர். இதைப் புரிந்துகொண்டு மருத்துவக்குழுவினர் இரவு நேரத்தில் சென்று விவசாயிகளை தடுப்பூசி செலுத்திக் கொள்ள அறிவுறுத்தியுள்ளனர். அப்போதும், பெரும்பாலானோர் மறுப்பு தெரிவிக்கவே, ஏமாற்றத்துடன் மருத்துவக் குழுவினர் திரும்புகின்றனர்.
வீணாகும் தடுப்பூசி