திருச்சி: இதுதொடர்பாக திருச்சி மாநகராட்சி ஆணையர் வைத்தியநாதன் வெளியிட்டுள்ள அறிவிப்பில், “திருச்சி மாநராட்சிக்குட்பட்ட ஶ்ரீரங்கம் மேலூர் ஆண்டவர் ஆசிரமம் பகுதியில் அமைந்துள்ள நீர் சேகரிப்பு கிணறு எண் 1, 2 மற்றும் 3 தரைமட்ட நீர் தேக்க தொட்டி மற்றும் ஆளவந்தான் படித்துறை நீர் சேகரிப்பு நிலையங்களுக்காக உள்ள ஶ்ரீரங்கம் 110/11k.v துணை மின் நிலையத்தில் மின் வாரியத்தால் பராமரிப்பு பணி இன்று (பிப்.15) காலை 9.45 மணி முதல் மாலை 4 மணி வரை மேற்கொள்ளப்பட உள்ளதால் மின் விநியோகம் இருக்காது.
குறிப்பாக மண்டலம் - 1இல், மேலூர், தேவி ஸ்கூல், பாலாஜி அவென்யூ, பெரியார் நகர் டி.வி. கோவில், அம்மா மண்டபம், AIBEA நகர், தேவதானம் ஆகிய பகுதிகளில் உள்ள உயர் நிலை நீர்த்தேக்க தொட்டிகளுக்கு குடிநீர் விநியோகம் இருக்காது. அதேபோல் மண்டலம் - 2இல் விறகுப்பேட்டை புதியது, சங்கிலியாண்டபுரம் புதியது, சங்கிலியாண்டபுரம் பழையது, கல்லுக்குழி புதியது, கல்லுக்குழி பழையது, கந்தராஜநகர் புதியது, சுந்தராஜபுரம் பழையது, காஜாமலை புதியது ஆகியவற்றிலும் உயர் நிலை நீர்த்தேக்க தொட்டிகளுக்கு குடிநீர் விநியோகம் நிறுத்தப்படும்.
மண்டலம் - 3இல் அரியமங்கலம் கிராமம், அரியமங்கலம் உக்கடை, தெற்கு உக்கடை, ஜெகநாதபுரம் புதியது, ஜெகநாதபுரம் பழையது, மலையப்ப நகர் புதியது, மலையப்ப நகர் பழையது, ரயில் நகர் புதியது, ரயில் நகர் பழையது, மகாலெட்சுமி நகர், முன்னாள் ராணுவத்தினர் காலணி புதியது, முன்னாள் இராணுவத்தினர் காலணி பழையது, எம்.கே.கோட்டை செக்ஸன் ஆபிஸ், எம்.கே.கோட்டை நாகம்மை வீதி, எம்.கே.கோட்டை நூலகம், பொன்னேரிபுரம் புதியது, பொன்னேரிபுரம் பழையது, பொன்மலைப்பட்டி, ஐஸ்வர்யா நகர் ஆகியவற்றில் உயர் நிலை நீர்த்தேக்க தொட்டிகளுக்கு குடிநீர் விநியோகம் நடைபெறாது.