தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

திருச்சியில் விரைவில் டைடல் பார்க்… இடம் ஒதுக்கி தமிழக அரசு அதிகாரப்பூர்வ அறிவிப்பு! - Tidel Park inTrichy Panjappur

Trichy tidel park: திருச்சி மேயர் தலைமையில் நடைபெற்ற மாமன்ற கூட்டத்தில், திருச்சி மதுரை தேசிய நெடுஞ்சாலை‌ பஞ்சப்பூரில் டைடல் பூங்கா அமைக்க 14.1 ஏக்கர் நிலம் ஒதுக்கி தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

திருச்சியில் விரைவில் டைடல் பார்க்…இடம் ஒதுக்கி தமிழக அரசு அதிகாரப்பூர்வ தகவல்
திருச்சியில் விரைவில் டைடல் பார்க்…இடம் ஒதுக்கி தமிழக அரசு அதிகாரப்பூர்வ தகவல்

By ETV Bharat Tamil Nadu Team

Published : Nov 1, 2023, 11:43 AM IST

திருச்சி :மாநகராட்சி அலுவலகத்தில் திருச்சி மேயர் அன்பழகன் தலைமையில், மாநகராட்சி ஆணையர் வைத்திநாதன், துணை மேயர் திவ்யா ஆகியோர் முன்னிலையில் மாமன்ற கூட்டம் நேற்று (அக் 31) நடைபெற்றது.

இந்தக் கூட்டத்தில் திருச்சி மாநகராட்சியில் அமைந்துள்ள ஐந்து கோட்டங்களில் இருக்கக் கூடிய 65 வார்டுகளில் புதிய திட்டங்கள் மற்றும் முடிவுற்ற பணிகளுக்கான தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. மேலும், திருச்சி மாநகராட்சி சார்பில் திருச்சி - மதுரை தேசிய நெடுஞ்சாலை‌ பஞ்சப்பூரில் டைடல் பூங்கா அமைக்க 14.1 ஏக்கர் நிலம் ஒதுக்க தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

தமிழ்நாட்டில் சென்னை, கோவை, மதுரை உட்பட 10 நகரங்களில் ஐடி பார்க் அமைக்கப்படும் என்று தமிழ்நாடு அரசு சமீபத்தில் அறிவித்தது. இதற்கான பணிகள் நடந்து வரும் நிலையில் திருச்சி மாநகராட்சி சார்பில் திருச்சி பஞ்சப்பூரில் டைடல் பூங்கா அமைக்க 14.1 ஏக்கர் நிலம் ஒதுக்க தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

முன்னதாக தமிழ்நாடு தொழில் வளர்ச்சிக் கழகம் (டிட்கோ) மற்றும் தமிழ்நாடு எலக்ட்ரானிக் கார்ப்பரேஷன் ஆஃப் (ELCOT) ஆகியவற்றின் கூட்டு நிறுவனமான டைடல் பார்க் லிமிடெட் நிறுவனத்திடம் ஐடி மற்றும் ஐடி அலுவலகம் கட்டுவதற்காக திருச்சி மாநகராட்சி பஞ்சப்பூரில் 8.9 ஏக்கர் நிலம் இறுதி செய்யப்பட்டது.

இந்த நிலையில் தான் முந்தைய ஒதுக்கீடு ரத்து செய்யப்பட்டு, பெரிய அலுவலக இடத்துக்கு புதிதாக தற்போது இடம் ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளது. நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளின் தேர்ந்தெடுக்கப்பட்ட கவுன்சில், டைடல் பூங்காவிடம் நிலத்தை ஒப்படைப்பதற்கு முன் அதன் மதிப்பை மதிப்பீடு செய்ய தீர்மானம் நிறைவேற்றியுள்ளது

திருச்சியில் இத்திட்டத்திற்காக 2023-24 பட்ஜெட்டில் மாநில தொழில் துறை 600 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்துள்ளது. பல இட ஆய்வுகளுக்குப் பிறகு, நகர்ப்புற உள்ளாட்சி அமைப்பு, பஞ்சப்பூர் வருவாய் கிராமத்தில் மாநகராட்சியின் 8.9 ஏக்கர் நிலம் திட்டத்திற்கு சாத்தியமானது என்று தெரிவித்தது. இது தற்போது 14.1 ஏக்கராக மாற்றப்பட்டு உள்ளது.

பஞ்சப்பூர் ஒருங்கிணைந்த பேருந்து நிலையத்தில் பல்வேறு வசதிகள் கூடிய காய்கறி மார்க்கெட் , லாரி முனையம், தீயணைப்பு துறை அலுவலகம், மின்சாரத்துறை அலுவலகம், உலகம் தரம் வாய்ந்த ஒலிம்பிக் ஸ்டேடியம் மற்றும் இளைஞர்களுக்கு அதிக வேலைவாய்ப்பை உருவாக்கக்கூடிய விதமாக டைட்டில் பார்க் அமைக்கப்படும் என ஏற்கனவே தெரிவிக்கப்பட்டது.

அதற்கான இடங்களை தேர்வு செய்யும் பணிகள் கடந்த சில மாதங்களாக தீவிரமாக நடைபெற்றது வந்த நிலையில் அதற்கான இடத்தை உறுதி செய்த மாநகராட்சி, அதற்கு செலவாகும் செலவினத்தையும் ஒதுக்கப்பட்டுள்ள இடத்தையும் குறித்து அதிகாரப்பூர்வமாக அறிவிப்பு மாமன்ற கூட்டத்தில் வெளியிடப்பட்டது.

இதையும் படிங்க:Cyclinder Price increase : காலையிலேயே ஷாக்! சிலிண்டர் விலை இவ்வளவு உயர்வா?

ABOUT THE AUTHOR

...view details