தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

தாய், மகனுடன் தற்கொலை செய்துக்கொண்ட இளைஞர்.. திருச்சியில் நடந்தது என்ன? - தற்கொலைக் கடிதம்

திருச்சி திருவானைக்கால் பகுதியில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூன்று பேர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Three
Three

By

Published : Dec 9, 2022, 4:46 PM IST

திருச்சி: திருவானைக்காவல் அகிலா நகரைச் சேர்ந்த கார்த்திகேயன்(34) என்பவர், 10 ஆண்டுகளுக்கு முன்பு வசந்த பிரியா என்ற பெண்ணை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்குச் சாமிநாதன் (8) என்ற மகன் இருந்தார். இவர்களுடன் கார்த்திகேயனின் தாய் வசந்தா (63) வசித்து வந்தார்.

கார்த்திகேயன் கடந்த மூன்று ஆண்டுகளுக்கு முன்பு துபாய்க்கு வேலைக்குச் சென்றார். ஓட்டுநராக பணிபுரிந்த அவர், அவ்வப்போது விடுமுறையில் ஊருக்கு வந்து செல்வார். கார்த்திகேயனின் மனைவி வசந்த பிரியா ஒரு தனியார் கார் நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார்.

கடந்த 3 நாட்களுக்கு முன்பு கார்த்திகேயன் துபாயிலிருந்து சொந்த ஊருக்குத் திரும்பினார். இந்த நிலையில் நேற்று(டிச.8) இரவு வசந்த பிரியா வேலையை முடித்துவிட்டு வீட்டுக்கு வந்தபோது வீட்டின் கதவு உள்பக்கமாகப் பூட்டப்பட்டிருந்தது. நீண்ட நேரமாகக் கதவை தட்டியும் யாரும் திறக்காததால், அவர் அக்கம்பக்கத்தினரை அழைத்தார். அருகிலிருந்தவர்கள் விரைந்து வந்து கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தனர். அப்போது, கார்த்திகேயன், அவரது தாயார் வசந்தா, மகன் சாமிநாதன் மூவரும் தூக்கில் சடசலமாகக் கிடந்தனர். இதைக் கண்டு அதிர்ச்சியடைந்த வசந்த பிரியா கதறி அழுதார்.

இது குறித்துத் தகவலறிந்து சம்பவ இடத்துக்குச் சென்ற ஸ்ரீரங்கம் போலீசார் உடல்களை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் வீட்டில் போலீசார் சோதனை நடத்தியதில் கடிதம் ஒன்று கிடைத்தது. அதில், "என் சாவுக்கு யாரும் காரணம் அல்ல - எனது தாய், மகன் கஷ்டப்படக்கூடாது என்பதற்காக அவர்களை என்னுடன் அழைத்துச் செல்கிறேன்" என்று கார்த்திகேயன் எழுதியிருந்ததாக போலீசார் தெரிவித்தனர்.

இந்த சம்பவம் குறித்து வசந்த பிரியா மற்றும் அவருடைய உறவினர்களிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். குடும்பத் தகராறு காரணமாகக் கார்த்திகேயன், தாய் மற்றும் மகனைக் கொன்று தற்கொலை செய்து கொண்டாரா? அல்லது வேறு ஏதும் காரணமா? என்பது குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இதையும் படிங்க:இளைஞரை புகைப்படம் எடுத்த காவலர்... தனிநபர் பிரைவசியினை மீறுகிறதா போலீஸ்?

ABOUT THE AUTHOR

...view details