தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

3 ராயல் என்பீல்டு பைக்கும்.. மூன்று திருடர்களும்! - இருசக்கர வாகனம் திருட்டு

திருச்சியில் விலை உயர்ந்த இரு சக்கர வாகனங்கள் திருடிய லாரி ஓட்டுனர் உள்பட 3 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

விலை உயர்ந்த பைக்கை திருடிய லாரி ஓட்டுனர் உள்பட 3 பேர் கைது
விலை உயர்ந்த பைக்கை திருடிய லாரி ஓட்டுனர் உள்பட 3 பேர் கைது

By

Published : Nov 15, 2022, 1:58 PM IST

திருச்சி: சென்னையில் இருந்து ஒரு கண்டெய்னர் லாரியில் 40 என்பீல்டு பைக்குகள் ஏற்றப்பட்டு தஞ்சை டீலருக்கு அனுப்பப்பட்டது. இந்த லாரியை துாத்துக்குடி சாத்தான் குளம் படுக்கபத்து பகுதியை சேர்ந்தவர் சுதாகர்(42) ஓட்டி வந்துள்ளார். திருச்செந்துார் உடன்குடியை சேர்ந்த அருண்(25), திருச்செந்துார் அருணாச்சலபுரத்தை சேர்ந்த சிவசந்திரன்(23) ஆகியோர் கிளினர், உதவியாளராக அந்த லாரியில் வந்துள்ளனர்.

சென்னையில் புறப்பட்ட அந்த கண்டெய்னர் லாரி குறிப்பிட்ட நேரத்தில் தஞ்சை வந்து சேரவில்லை. இது குறித்து தஞ்சை டீலர் சென்னை அலுவலகத்திற்கு தொடர்பு கொண்டு கேட்டுள்ளார். இதனை தொடர்ந்து லாரியில் உள்ளவர்களை செல்போனில் தொடர்பு கொள்ள முயன்ற போது 3 பேரின் செல்போனும் சுவிட்ச்ஆப் ஆகி இருந்துள்ளது.

இதனை தொடர்ந்து லாரியில் பொருத்தப்பட்டிருந்த ஜிபிஎஸ் கருவி உதவியுடன் லாரி சென்று கொண்டிருக்கும் இடத்தை சென்னை அலுவலகத்தில் உள்ளவர்கள் பார்த்த போது, லாரி வெகு நேரமாக திருச்சி மாவட்டம் சிறுகனுார் பகுதியில் நின்று கொண்டிருப்பதாக ஜிபிஎஸ் கருவி லொகேஷன் காட்டி உள்ளது.

இதன் பின்னர் அலுவலர்கள் சென்னையிலிருந்து சென்று கொண்டிருந்த வேறு சில லாரி டிரைவர்களை தொடர்பு கொண்டு, திருச்சியை கடப்பதற்கு முன்பாக சிறுகனுாரில் நிற்கும் கண்டெய்னர் லாரி குறித்து விசாரித்து சொல்ல அறிவுறுத்தப்பட்டனர்.

அதே போல அடுத்ததாக வந்த லாரி டிரைவர், சிறுகனுார் பகுதியில் லாரியை கண்டவுடன் நிறுத்தி ஓட்டுனர் சுதாகரை தேடி உள்ளார், சுதாகரை காணவில்லை. ஆனால் லாரி சாவி லாரியிலேயே இருந்துள்ளது. இது குறித்து சென்னைக்கு செல்போன் மூலம் தகவல் அளித்துள்ளார்.

இதனால் சந்தேகம் அடைந்த சென்னை அலுவலர்கள் லாரியை சோதித்து பார்க்குமாறு கூறியுள்ளனர். அப்போது அந்த டிரைவர் லாரியின் பின்புறம் திறந்து பார்த்த போது 3 என்பீல்டுகள் காணாமல் போய் இருப்பது தொிய வந்தது. இதனை தொடர்ந்து இதுகுறித்து சிறுகனுார் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது.

உடனடியாக காவல்துறையினர் லாரி ஓட்டுனர் சுதாகரின் செல்போன் லொகேஷன்களை சைபர் கிரைம் காவல்துறை உதவியுடன் கண்டு பிடித்தனர். அந்த செல்போன் கடைசியாக திருச்செந்துார் உடன்குடி பகுதியில் இருந்ததாக காட்டியுள்ளது. இதனைத் தொடர்ந்து திருச்செந்துாரில், திருட்டு பைக்கில் வலம் வந்த 3 பேரையும் பைக்கோடு துாக்கி வந்த சிறுகனுார் காவல்துறையினர் அவர்கள் மீது வழக்கு பதிந்து கைது செய்துள்ளனர்.

இதையும் படிங்க:வெளிநாடுகளில் இருந்து ரூ.3.24 கோடி தங்கம் கடத்தல்.. குருவிகள் சிக்கியது எப்படி?

ABOUT THE AUTHOR

...view details