திருச்சி:108 வைணவத் தலங்களில் முதன்மையானதும், பூலோக வைகுண்டம் என பக்தர்களால் போற்றப்படும் ஶ்ரீரங்கம் ரங்கநாதர் கோயிலில், ஆண்டுதோறும் வைகுண்ட ஏகாதசி விழா கொண்டாடப்படுவது வழக்கம். அதேபோல, இந்த ஆண்டும் வைகுண்ட ஏகாதசி விழா வெகு விமர்சையாக நடைபெற்று வருகிறது.
திருமாலுக்குத் தொண்டுகள் செய்த திருமங்கை மன்னன், தன்னிடம் இருந்த பெரும் பொருட்களைச் செலவு செய்தார். தொடர்ந்து செய்வதற்கு, தன்னிடம் பொருள் இல்லாமல், வழிப்பறி கொள்ளைகளில் ஈடுபட்டதால், ஓம் நமோ நாராயணாய என்ற நாமத்தை உபதேசித்து, அவரை ஆட்கொண்ட வைபம்தான் வேடுபறி உற்சவம் என கருதப்படுகிறது.
ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோயிலில், வைகுண்ட ஏகாதசி உற்சவம் கடந்த டிச.12ஆம் தேதி அன்று திருநெடுந்தாண்டகம் நிகழ்ச்சியுடன் துவங்கியது. மறுநாள் 13ஆம் தேதி முதல் 22ஆம் தேதி வரை பகலில் பத்து உற்சவம் நடைபெற்றது. முன்னதாக, இந்த பகல் பத்து நிகழ்வில் பெருமாள் பல்வேறு அலங்காரத்துடன் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சியளித்தார். பகல் பத்து உற்சவம் நிறைவு நாளன்று, பெருமாள் மோகினி அலங்காரத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சியளித்தார்.