திருச்சி மாவட்ட விவசாயிகள் குறைதீர் கூட்டம் இன்று ஆட்சியர் அலுவலகத்தில் நடந்தது. இந்தக் கூட்டத்தில் விவசாயிகள் பலர் கலந்துகொண்டு தங்களது கோரிக்கைகளை வலியுறுத்தினர்.
திருவோடு ஏந்தி போராடிய விவசாயிகள்! - hydro carbon
திருச்சி: ஹைட்ரோ கார்பன் திட்டத்துக்கு எதிராக மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று விவசாயிகள் திருவோடு ஏந்தி போராட்டத்தில் ஈடுபட்டனர்.
farmer
அப்போது , தமிழ்நாடு ஏரி மற்றும் ஆற்றுப்பாசன விவசாயிகள் சங்க மாநிலத் தலைவர் விஸ்வநாதன் தலைமையில் விவசாயிகள் திருவோடு ஏந்தி போராட்டம் நடத்தினர்.
ஹைட்ரோ கார்பன் திட்டத்தை மத்திய, மாநில அரசுகள் ரத்துசெய்ய வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி இந்தப் போராட்டம் நடந்தது. அதன்பிறகு விஸ்வநாதன் தலைமையில், ஆட்சியிர் சிவராசுவை சந்தித்து கோரிக்கை மனு அளிக்கப்பட்டது.