தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

மணப்பாறையில் 386 குடும்பங்களுக்கு நிவாரணம் வழங்கிய எம்.எல்.ஏ. - saloon

திருச்சி: மணப்பாறையில், வாழ்வாதாரத்தை இழந்து தவித்து வரும் முடி திருத்தும் குடும்பங்களுக்கு சட்டப்பேரவை உறுப்பினர் சந்திரசேகர் நிவாரண பொருள்களை வழங்கினார்.

manapparai
manapparai

By

Published : May 13, 2020, 8:58 AM IST

கரோனா பாதிப்பு காரணமாக இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டு பொதுமக்கள் பல்வேறு சிரமங்களுக்கு ஆளாகி வருகின்றனர். கூலித்தொழிலாளர்களின் நிலை மிகவும் கவலையளிக்கக் கூடிய வகையில் உள்ளது. அதேபோன்று முடி திருத்தும் தொழிலாளர்களின் வாழ்க்கையும் கேள்விக்குறியாகியுள்ளது. ஊரடங்கு உத்தரவால், பல ஆயிரக்கணக்கான முடி திருத்தும் தொழிலாளர்கள் வருமானமின்றி தவித்து வருகின்றனர்.

முடி திருத்தும் நிலையங்கள் மற்றும் அழகு நிலையங்கள் உள்ளிட்ட தனி கடைகளுக்கு இன்னும் அனுமதி வழங்காததால் கரோனாவை வறுமையுடனே கடந்து செல்கின்றனர். இந்நிலையில், திருச்சி மாவட்டம் மணப்பாறையில் வாழ்வாதாரமின்றி வறுமையில் வாழும் முடி திருத்தும் தொழிலாளர்களுக்கு, சட்டப்பேரவை உறுப்பினர் சந்திரசேகர் நிவாரண தொகுப்புகளை வழங்கினார்.

நிவாரண தொகுப்புகளை வழங்கி எம்எல்ஏ

இதில் மணப்பாறை மற்றும் துவரங்குறிச்சி சுற்றுவட்டார பகுதிகளைச் சேர்ந்த 266 முடி திருத்துவோரின் குடும்பங்களுக்கு அரிசி, காய்கறி, மளிகை உள்ளிட்ட நிவாரண தொகுப்புகளை வழங்கினார். இதேபோல் கரோனா அறிகுறியுடன் தனிமைப்படுத்தபட்டுள்ள எப். கீழையூர் காலனி மற்றும் காரணிபட்டி பகுதிகளில் வாழ்வாதாரமின்றி தவிக்கும் 120 குடும்பங்களுக்கும் நிவாரண தொகுப்பு வழங்கப்பட்டது.

வாழ்வாதாரமின்றி தவித்து வந்த முடி திருத்துவோரின் குடும்பத்திற்கு உதவி செய்த எம்எல்ஏ சந்திரசேகருக்கு முடி திருத்தும் தொழிலாளர்கள் நன்றியை தெரிவித்தனர்.

இதையும் படிங்க:ஹாக்கி ஜாம்பவான் பல்பிர் சிங் கவலைக்கிடம்

ABOUT THE AUTHOR

...view details