திருச்சி மாவட்டத்தில் இன்று அதிகாலை முதல் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. இதன் காரணமாக பள்ளி, கல்லூரி மாணவ மாணவிகள் பள்ளிக்குச் செல்ல முடியாமல் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இந்நிலையில், மாவட்ட நிர்வாகம் விடுமுறை அளிக்காததால் மாணவர்கள் பலர் மழையில் நனைந்து கொண்டே பள்ளிக்குச் சென்றனர். அதேபோல், பணிக்குச் செல்வோரும், வாகன ஓட்டிகளும் மழையில் நனைந்து கொண்டு வாகனத்தை ஓட்டிச் சென்றனர்.