மக்களவைதுணை சபாநாயகரும், அதிமுகவின் மூத்ததலைவருமான தம்பிதுரை மக்களவைத் தேர்தலுக்காக கரூர் தொகுதியில் தீவிர வாக்குச் சேகரிப்பில் ஈடுபட்டுவருகிறார். திருச்சி மாவட்டம் மணப்பாறை நகராட்சிக்கு உட்பட்ட 22 வார்டுகளில் கூட்டணிக் கட்சியினருடன் திறந்த ஜீப்பில் பரப்புரையில் மேற்கொண்டார்.
வைகை ரயிலை மணப்பாறையில் நிற்கவைத்தவன் நான்! தம்பிதுரை பேச்சு
திருச்சி: '45 ஆண்டுகளாக மணப்பாறையில் நிற்காமல் சென்ற வைகை விரைவு வண்டியை நின்று செல்ல நடவடிக்கை எடுத்தது நான்தான்' என தம்பிதுரை பேசியுள்ளார்.
பரப்புரையின்போது தம்பிதுரை பேசுகையில்,'மணப்பாறையில் உள்ள இரண்டு ரயில்வே மேம்பாலங்கள் என்னுடைய காலத்தில் அமைக்கப்பட்டது.45 ஆண்டுகளாக மணப்பாறையில் நிற்காமல் சென்ற வைகை விரைவு ரயிலை சோதனை ஓட்ட முறையில் நின்று செல்ல நடவடிக்கை எடுத்தேன்.
கடந்த காலங்களில் மாவட்ட ஆட்சியருடன் மக்களை சந்தித்து குறைகளை கேட்டு, வீதி வீதியாக நடந்து சென்றவன் நான்தான். மணப்பாறையில் பகுதியில் தண்ணீர் பிரச்னையை தீர்த்து வைப்பது என்னுடைய பொறுப்பு. காவிரி குடிநீர் பிரச்னையை ஆறு மாத காலத்தில் தீர்த்து வைப்பேன்' என உறுதியளிக்கிறேன்.