திருச்சி மாவட்டம் மருங்காபுரி ஒன்றியத்துக்கு உட்பட்ட மணியங்குறிச்சி, கருமலை உள்ளிட்ட கிராமப் பகுதிகளில் கரூர் நாடாளுமன்ற தொகுதியின் அதிமுக கூட்டணி வேட்பாளர் தம்பிதுரை இன்று வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். அப்போது
திமுகவுக்கு வாக்களித்து ஜெயிக்க வைத்தால் நாட்டில் அராஜகம்தான் நடக்கும் - தம்பிதுரை பேச்சு - thambhidurai
திருச்சி: திமுகவுக்கு வாக்களித்து ஜெயிக்க வைத்தால் நாட்டில் எதுவும் நடக்காது, அராஜகம்தான் நடக்கும் என கரூர் நாடாளுமன்றத்தொகுதி அதிமுக வேட்பாளர் தம்பிதுரை கூறியுள்ளார்.
அவர் பொதுமக்களிடம் பேசுகையில், நமது கூட்டணி ஒரு வெற்றிக் கூட்டணி. ஆயிரம் ரூபாய் கொடுக்க கூடாது, இரண்டாயிரம் ரூபாய் கொடுக்க கூடாது என்று வழக்கு தொடர்ந்தவர்கள் திமுகவினர். கொடுக்கின்ற கட்சி அதிமுக. ஆனால் அதை தடுக்கின்ற கட்சி திமுக. அவர்கள் எதை வேண்டுமானாலும் வழக்கு தொடர்ந்து தடுத்து விடுவார்கள்.
ஜெயலலிதாவை சிறையில் தள்ளியவர்கள் திமுகவும், காங்கிரஸும். ஜெயலலிதாவை சிறையில் அடைத்து, அவர்களது மறைவிற்கு காரணமாக இருந்தவர்கள் திமுக. இந்த கூட்டணி இப்போது சேர்ந்து கொண்டு வெட்கமில்லாமல் வாக்கு சேகரிக்கிறார்கள். அவர்களுக்கு ஓட்டு போட்டு ஜெயிக்க வைத்தால் எதுவும் நடக்காது, நாட்டில் அராஜகம்தான் நடக்கும். ஜெயலலிதா இறந்த பிறகு நடக்கின்ற முதல் தேர்தல். செய்த நன்மைகளுக்கெல்லாம் உரிய சின்னம் இரட்டை இலை. எம்ஜிஆரின் சின்னம் இரட்டை இலை. உங்களுக்காக உழைக்கின்ற ஏழை மக்களுக்கான கட்சியின் சின்னம் இரட்டை இலை எனக் கூறினார்.