திருச்சிமாநகர ஆயுதப்படை வளாகத்தில் உள்ள ரைபிள் கிளப்பில் 47ஆவது மாநில அளவிலான துப்பாக்கி சுடுதல் போட்டி கடந்த 24ஆம் தேதி தொடங்கியது. இதில் 10 மீட்டர்,25 மீட்டர்,50 மீட்டர் அளவிலான போட்டிகளில் தமிழ்நாடு முழுவதிலும் இருந்து 1,200 போட்டியாளர்கள் பங்கேற்றனர்.
பிஸ்டல் பிரிவில் வெற்றி பெற்றவர்களுக்கு நேற்று முன்தினம் நடைபெற்ற பரிசளிப்பு விழாவில் ஓய்வு பெற்ற டி.ஜி.பி.தேவாரம் 162 பேருக்கு பதக்கங்களை வழங்கினார். இந்நிலையில் கடந்த 27ஆம் தேதி நடிகர் அஜித்குமார் மாஸ்டர் பிரிவில் பங்கேற்ற சென்டர் பயர் பிஸ்டல் மாஸ்டர் ஆண்கள் அணி பிரிவில் தங்கப்பதக்கமும், ஸ்டாண்டர்டு பிஸ்டல் மாஸ்டர் ஆண்கள் அணி பிரிவில் தங்கப்பதக்கமும், 50 மீட்டர் பிரீ பிஸ்டல் மாஸ்டர் ஆண்கள் அணி பிரிவில் தங்கப்பதக்கமும், ஸ்டாண்டர்டு பிஸ்டல் மாஸ்டர் ஆண்கள் அணி (ஐ.எஸ்.எஸ்.எப்) பிரிவில் தங்க பதக்கமும் வென்றுள்ளது.