கரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக இந்தியாவில் 21 நாள்களுக்கு ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டதையடுத்து, நாடு முழுவதுமுள்ள விமான நிலையங்கள் செயல்படாமல் உள்ளன.
இதனால், வெளிநாடுகளிலிருந்து இந்தியாவுக்குச் சுற்றுலா வந்த பலர் சொந்த நாட்டிற்கு திரும்பமுடியாமல் தவித்துவந்தனர்.
இந்நிலையில், திருச்சியில் தவித்துவரும் மலேசிய சுற்றுலாப் பயணிகளுக்கு உதவும் வகையில் மூன்று நாள்கள் மலேசியாவுக்கு சிறப்பு விமானம் இயக்கப்படவுள்ளது. திருச்சியிலிருந்து மலேசியாவிற்கு இயக்கப்படும் மலிண்டோ விமானம் மூன்று நாள்களுக்கு இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.