தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

'புதிய தேசிய கல்விக் கொள்கையை மக்கள் விரும்பவில்லை..!' - பாரிவேந்தர்

திருச்சி: "புதிய தேசிய கல்விக் கொள்கை தமிழ்நாட்டு மக்களுக்கு ஏற்றதாக இல்லை. அதனை மக்கள் விரும்பவும் இல்லை" என்று, எம்பி பாரிவேந்தர் தெரிவித்துள்ளார்.

’இந்தி திணிப்பு மாநில கொள்கைளுக்கு எதிரானது’- பாரிவேந்தர்

By

Published : Jul 20, 2019, 11:15 PM IST

இந்திய ஜனநாயக கட்சியின் நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம், திருச்சி எஸ்ஆர்எம் ஓட்டலில் இன்று நடந்தது. கூட்டத்தில் கட்சியின் நிறுவனரான பாரிவேந்தர் தலைமை தாங்கினார். இதில் கட்சி மாநில, மாவட்ட நிர்வாகிகள் பலர் கலந்துக் கொண்டனர்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய பாரிவேந்தர், "இந்தி மொழித் திணிப்பு என்பது மாநில கொள்கைகளுக்கு எதிரானது. புதிய கல்விக் கொள்கை தமிழக மக்களுக்கு ஏற்றதாக இல்லை. அதனை மக்கள் விரும்பவில்லை. பெரம்பலூர் தொகுதியில் குடிநீர் பிரச்னைகளை தீர்க்க வேண்டும். விவசாயிகள் நிறைந்த தொகுதி என்பதால் விளைப்பொருட்களை பாதுகாத்து வைக்க குளிர்பதன கிடங்குகள் அமைக்க நாடாளுமன்றத்தில் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது. திருச்சி சமயபுரம் டோல்கேட் பகுதியில் அமைக்கப்பட்டுள்ள எம்.பி., அலுவலகத்தில் மக்களின் குறைகள் தொடர்ந்து கேட்கப்பட்டு உரிய நடவடிக்கை எடுக்கப்படும்" என்றார்.

’இந்தி திணிப்பு மாநில கொள்கைளுக்கு எதிரானது’- பாரிவேந்தர்

ABOUT THE AUTHOR

...view details