தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

“தமிழ்நாட்டில் ஊழல் அதிகமாக உள்ளதால் வளர்ச்சி பின்னோக்கி செல்கிறது” அண்ணாமலை குற்றச்சாட்டு

Bjp Annamalai: அமைச்சர் உதயநிதி இன்னும் அரசியலில் பல இடங்களுக்கு செல்ல வேண்டும் என்பதால் அவர் பேசிய வார்த்தைகள் தவறு என்று அமைச்சர் நிர்மலா சீதாராமன் சுட்டிக் காட்டியுள்ளார் என பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

tamilnadu development is going backwards due to corruption Annamalai accused
பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை பேட்டி

By ETV Bharat Tamil Nadu Team

Published : Dec 25, 2023, 7:12 PM IST

பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை பேட்டி

திருச்சி:கும்பகோணத்தில் நடைபெற உள்ள 'என் மண் என் மக்கள்' பாதயாத்திரையில் கலந்து கொள்வதற்காக இன்று பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை திருச்சி விமான நிலையத்திற்கு வந்தார். அங்குச் செய்தியாளர்களைச் சந்தித்து தமிழ்நாட்டில் ஊழல் அதிகமாக உள்ளதால் தான் வளர்ச்சி பின் நோக்கிச் செல்கிறது எனத் தெரிவித்துள்ளார்.

அப்போது அவர் பேசுகையில், “திருச்சியில் சுமார் 1,200 கோடி மதிப்பீட்டில் புதிதாகக் கட்டப்பட்ட சர்வதேச விமான நிலையம் பணிகள் முழுமையாக முடிவடைந்து உள்ளது. திறப்புவிழா நிகழ்வு வரும் ஜனவரி 2ஆம் தேதி நடைபெற உள்ள நிலையில் பிரதமர் மோடி பங்கேற்பது இன்னும் உறுதி செய்யப்படவில்லை.

தமிழ்நாட்டில் வட மாநில தொழிலாளருக்குப் பிரச்சனை வரும்போது நான் கேள்வி கேட்டேன். அதற்கு திமுக அரசு என் மீது வடமாநில தொழிலாளர்களின் பிரச்சினை குறித்து சர்ச்சைக்குரிய கருத்துக்களைப் பரப்பியதாக என் மீது வழக்குப் பதிவு செய்தது. வடமாநில தொழிலாளர்களைப் பற்றி திமுக அரசு தேர்தல் அறிக்கையில் கூறியது, தயாநிதி மாறன், டி.ஆர்.பி.ராஜா பேசியதை நான் மக்களிடம் எடுத்துக் கூறினேன்.

ஆனால் காவல்துறை என் மீது வழக்குப் பதிவு செய்தது. முறைப்படி முதலமைச்சர் ஸ்டாலின், தயாநிதி மாறன், டி.ஆர்.பி.ராஜா ஆகியோர் மீது வழக்குப் பதிவு செய்திருக்க வேண்டும். திமுக அரசு, தமிழ்நாட்டின் வளர்ச்சி எப்படி உள்ளது மற்ற மாநிலங்களின் வளர்ச்சி எப்படி உள்ளது என்பதை நினைத்துப் பார்க்க வேண்டும். தமிழ்நாட்டில் ஊழல் அதிகமாக உள்ளதால் வளர்ச்சி பின்னோக்கி சென்று கொண்டிருக்கிறது இதை திமுக அரசு கவனிக்க வேண்டும்.

இது தான் திராவிட மாடல் ஆட்சியா: அனைத்து துறைகளிலும் தமிழ்நாடு மிகப் பெரிய வளர்ச்சி அடைந்து வருகிறது. ஆனால் இரண்டாம் இடத்தில் இருந்த தமிழ்நாடு ஏன் மூன்றாம் இடத்திற்குச் சென்றது. இதுதான் திராவிட மாடல் ஆட்சியா. தமிழ்நாட்டில் திமுக ஆட்சிப் பொறுப்புக்கு வந்த பிறகு ஏழரை லட்சம் கோடி கடன் அதிகப்படுத்தியது தான் திராவிட மாடல் அரசா.

தூத்துக்குடி வெள்ளத்திற்கு மாநில அரசு தான் காரணம்:தூத்துக்குடி மாவட்டத்தில் 120 அடி அகலம் இருந்த பக்கிங்காம் கால்வாயை ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் பணிகளை மேற்கொண்டு அதை 20 அடியாகக் குறுக்கி விட்டார்கள். இதனால் கடலுக்குச் செல்லக்கூடிய வெள்ள நீர் செல்ல முடியாமல் இத்தகைய பாதிப்பை ஏற்படுத்தி உள்ளது. இதற்குக் காரணம் மாநில அரசுதான். ஸ்மார்ட் சிட்டி திட்டத்திற்கு நிதிகளை மத்திய அரசு வழங்கினாலும் திட்டத்தையும், பணிகளையும் மேற்கொள்வது மாநில அரசு.

நிர்மலா சீதாராமன் தவறாகப் பேசவில்லை: தொடர் கனமழை பெய்து பாதிப்பு ஏற்பட்ட போதும் மாநில அரசு மத்திய அரசுக்குத் தகவல் கொடுக்கவில்லை. இந்நிலையில் தமிழ்நாட்டுப் பெண் நிதி அமைச்சராக இருக்கக்கூடிய நிர்மலா சீதாராமன் தானாக முன்வந்து, மத்திய அமைச்சர் அமித்ஷாவைச் சந்தித்து தமிழ்நாட்டில் நிலைமையை எடுத்துரைத்து, தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்துள்ளார். இதை திருமாவளவன் புரிந்து கொள்ள வேண்டும்.

இந்தியா கூட்டணி ஆலோசனைக் கூட்டத்திற்குச் சென்ற தமிழ்நாடு முதலமைச்சர் போறப்போக்கில் பிரதமரைப் பார்க்கலாமே என்று பார்த்திருக்கிறார். ஆனால் நிர்மலா சீதாராமன் தானாக முன்வந்து பாதிக்கப்பட்ட பகுதிகள் குறித்துக் கேட்டறிந்து அதற்கு உரிய நடவடிக்கையும் எடுத்துள்ளார்.

அமைச்சர் நிர்மலா சீதாராமன் பேசியதை நன்கு கவனிக்க வேண்டும், அவர் தவறாக எதையும் பேசவில்லை. அமைச்சர் உதயநிதி பேசியதற்கு நீங்கள் இன்னும் அரசியலில் பல இடங்களுக்குச் செல்ல வேண்டும், ஆகையால் நீங்கள் பேசிய வார்த்தைகள் தவறு என்று சுட்டிக் காட்டியுள்ளார். தவிரத் தவறாக எதுவும் பேசவில்லை” எனத் தெரிவித்துள்ளார்.

இதையும் படிங்க:திராவிட மாடலா..? திண்டாடும் மாடலா..? - ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் சரமாரி கேள்வி

ABOUT THE AUTHOR

...view details