அமமுகவின் அகில உலக செயல்வீரர்கள் அறிமுகக்கூட்டம் இன்று திருச்சி மத்தியப் பேருந்து நிலையம் அருகேயுள்ள தனியார் ஹோட்டலில் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் கட்சியின் கொள்கைபரப்புச் செயலாளர் செய்யார் சரஸ்வதி, அமைப்புச் செயலாளர்கள் மனோகர், சாருபாலா தொண்டைமான், மாவட்டச் செயலாளர்கள் சீனிவாசன், ராஜசேகர் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
இக்கூட்டத்தில் துபாயில் உள்ள கட்சி நிர்வாகிகளுடன் வீடியோ கான்பரன்ஸ் மூலம் உரையாடப்பட்டது. இக்கூட்டத்தில் கலந்துகொண்டு பேசிய தமிழ்நாடு முஸ்லீம் லீக் கட்சியின் மாநிலத் தலைவர் முஸ்தபா, ”தமிழ்நாட்டின் முதலமைச்சராக இருக்கும் ஈபிஎஸ், துணை முதலமைச்சராக இருக்கும் ஓபிஎஸ் ஆகியோர் ஒரு பிரயோஜனமும் இல்லாதவர்கள்.