திருச்சி:ஹஜ் உம்ரா தனியார் பயண ஏற்பாட்டாளர்கள் சங்கத்தை, தமிழக அரசு சிறுபான்மை துறை அமைச்சகத்தின் கீழ் பதிவு செய்து அங்கீகாரம் வழங்க வேண்டும் என திருச்சியில் நடந்த ஹஜ் உம்ரா தனியார் பயண ஏற்பாட்டாளர்கள் சங்க பொதுக்குழுவில், சங்கத்தின் மாநிலத் தலைவர் முகமது சபியுல்லா தெரிவித்துள்ளார்.
தமிழ்நாடு ஹஜ் உம்ரா தனியார் பயண ஏற்பாட்டாளர்கள் சங்கத்தின் பொதுக்குழு கூட்டம் நேற்று (நவ.25) திருச்சி கண்டோன்மென்ட் பகுதியில் நடைபெற்றது. ஹஜ் உம்ரா தனியார் ஏற்பாட்டாளர்கள் சங்கத்தின் மாநிலத் தலைவர் முகமது சபியுல்லா தலைமையில் நடைபெற்ற கூட்டத்திற்கு, தமிழகம் முழுவதும் பல்வேறு மாவட்டங்களில் இருந்து ஹஜ் உம்ரா ஏற்பாட்டாளர்கள் கலந்து கொண்டனர். இக்கூட்டத்தில் பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.
பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்து, சங்கத்தின் மாநிலத் தலைவர் முகமது சபியுல்லா பேசியதாவது, “ஹஜ் உம்ரா தனியார் பயண ஏற்பாட்டாளர்கள் சங்கத்தை, தமிழக அரசு சிறுபான்மை துறை அமைச்சகத்தின் கீழ் பதிவு செய்து அங்கீகாரம் வழங்க வேண்டும். உம்ரா புனித பயண ஏற்பாட்டாளர்களுக்கு தொழில் உரிமைச் சான்றிதழ் வழங்கி, தமிழக அரசு முறைப்படுத்த வேண்டும்.