திருச்சிராப்பள்ளி மாவட்ட நிர்வாகம் சார்பில் வேலைவாய்ப்பு மற்றும் தொழில் நெறி வழிகாட்டும் மையம் இணைந்து நடத்தும் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் நடந்து வருகிறது.
திருச்சி எஸ்.ஐ. டி தொழில்நுட்ப பயிலகத்தில் நடைபெறும் வேலை வாய்ப்பு முகாமை தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டு துறை அமைச்சர் கணேசன், பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் மகேஷ் ஆகியோர் துவக்கி வைத்து பணி நியமன ஆணைகளை வழங்கினர்.
பின்னர் செய்தியாளர் சந்திப்பில் பள்ளி கல்வித்துறை அமைச்சர் மகேஷ், மத்திய கல்வி இணை அமைச்சர் பொய்யான தகவல்களை தமிழகத்துக்கு வந்து பரப்பி சென்றுள்ளார்.
திருச்சியில் வந்து புதிய கல்விக் கொள்கையை தமிழக அரசு பின்பற்றுவதாக தவறான தகவல் தெரிவித்துள்ளார். தமிழக அரசு புதிய கல்விக் கொள்கை பின்பற்றவில்லை. யாரோ தவறான தகவலை அவருக்கு கொடுத்துள்ளனர்.
மத்திய கல்வி இணையமைச்சர் சரியாக படித்து பார்க்கவில்லை என எண்ணுகிறேன். அவர் சரியாக படித்து பார்த்தால் தெரியும் அவர் கூறுவது போல் எதுவும் இல்லை என அமைச்சர் மகேஷ் குறிப்பிட்டார்.