திருச்சி மாவட்டம் மணப்பாறையில் ஆழ்துளை கிணற்றில் தவறி விழுந்த குழந்தையை மீட்க தேசிய, மாநில பேரிடர் மீட்புக் குழுவினர் சம்பவ இடத்திற்கு வந்து குழந்தையை மீட்கும் பணியில் ஈடுபட்டுவருகின்றனர். இந்நிலையில், சுர்ஜித் 70 அடி ஆழத்திலிருந்து 80 அடி ஆழத்திற்குச் சென்றுள்ளார்.
80 அடி ஆழத்திற்குச் சென்ற சுர்ஜித்: நீடிக்கும் மீட்புப்பணி...! - திருச்சி 80 அடி ஆழத்திற்குச் சென்ற சுர்ஜித்
திருச்சி : மணப்பாறையில் ஆழ்துளை கிணற்றில் விழுந்த சுர்ஜித் 80 அடிக்கும் கீழே சென்றுள்ளதால் மீட்புப்பணி நீடித்துள்ளது.
80 அடி ஆழத்திற்கு சென்ற குழந்தை
மேலும், மண்சரிவு ஏற்பட்டு தண்ணீர் ஊற்றெடுத்து வருவதால் குழந்தையை மீட்பதில் பெரும் சிக்கல் ஏற்பட்டுள்ளது. இருப்பினும் மீட்புக்குழுவினர் நவீன கருவியின் மூலம் சுர்ஜித்தை மீட்கப் போராடிவருகின்றனர். கூடிய விரைவில் சுர்ஜித் மீட்கப்படுவார் என்று மீட்புக் குழுவினர் நம்பிக்கைத் தெரிவித்துள்ளனர்.